(இ - ள்.) ஆயிடை - அப்போது; சாரணர்கள் - இரண்டு சமண முனிவர்கள்; ஆர் அணங்கு அவிர் ஒளி எரிய - பொருந்திய தெய்வத் தன்மை விளங்குகின்ற ஒளி மிகுதிப்படுமாறு; விசம்பினின்று இழிந்து - விண் ணினின்று இறங்கிவந்து; தாதைதன் - எல்லோருக்குந் தந்தையாக விளங்கும் அருகக் கடவுளின்; ஏர் அணி வளநகர் வலம்கொண்டு - அழகு பொருந்திய சிறப்புள்ள திருக்கோயிலை வலஞ்செய்து; இன்னணம் - இவ்வாறு; சீர்அணி மணிக்குரல் - நன்கு ஒலிக்கும் மணியொலி போன்ற குரலானது; சிலம்ப வாழ்த்தினார் - முழங்கும்படியாகப் போற்றலானார்கள், (எ - று.) அரசன் கோயிலைவிட்டு வெளிப்படுஞ் சமயத்தில் சாரணர் இருவர் விண்ணில் நின்றும் இழிந்து திருக்கோயிலை வணங்கி வாழ்த்தினர். சாரணர் விண்ணிற் போக்கு வரவு செய்யுஞ் சமண முனிவர்கள். அவர்கள், தலசாரணர், ஐலசாரணர், பலசாரணர், புஷ்பசாரணர், தந்து சாரணர், சதுரங்குலசாரணர், |