பக்கம் : 148 | | என்றாலும்; உலகம் கண்டு குளிர்ந்து உவப்ப நின்றாய்கண் - உலகத்துயிர்கள் கண்டு பிறவித்துன்பம் ஒழிந்து மகிழுமாறு நின்ற நின்னிடத்தில்; காதல் ஒழியோம் - நாங்கள் அன்பு நீங்கமாட்டோம், (எ - று.) வான் என்பது வானத்திலுள்ள தேவர்களைக் காட்டுதலின் இடவாகு பெயர். சைனசமயத்திலே கூறப்பெறும் இறைவனுடைய குணங்கள், அநந்தசுகம், அநந்த ஞானம், அநந்தவீரியம், அநந்ததரிசனம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அழியாவியல்பு என எட்டாம். | ( 71 ) | வேறு முனிவர்களின் போற்றுதலைக்கேட்ட உயிர்கள்தீவினை தீர்தல் | 190. | தீதறு முனிவர்தஞ் செல்வன் சேவடிக் காதலி னெழுவிய காம ரின்னிசை யேதமின் றெவ்வள விசைத்த தவ்வள வோதிய வுயிர்க்கெலா முறுகண் டீர்ந்தவே. | (இ - ள்.) தீது அறு முனிவர் - குற்றமற்ற சைன முனிவர்கள், தம் செல்வன் சேவடி - தங்கள் கடவுளான அருகனது சிவந்த திருவடி களினிடத்தில்; எழுவிய - இவ்வாறு குரல் விட்டுப்பாடிய; ஏதம் இன்று - குற்றமில்லாததான; காமர் இன்னிசை - அழகிய இனிய பாடல்களின் ஒலி; எவ்வளவு இசைத்தது - எவ்வளவு தொலைவரையிற் கேட்டதோ; அவ்வளவு - அவ்வளவு தொலைவரையிலுமுள்ள; ஓதிய உயிர்க்கு எலாம் - சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற உயிர்களுக்கெல்லாம்; உறுகண் தீர்ந்த - தீவினைத் துன்பங்கள் நீங்கின, (எ - று.) சாரணர்கள் கடவுளைப் புகழ்ந்து பாடிய இசையைக் கேட்ட உயிர்கள் யாவும் தீவினை நீங்கி இன்பத்தையடைந்தன. கடவுளைப் புகழ்தலை யல்லாமல், அதனைக் கேட்டல்தானும் உயிர்கட்கு இன்பத்தைச் செய்யு மென்பது இதனால் பெறப்பட்டது. செல்வன் - செல்வங்கள் எல்லாவற்றையும் உடைய கடவுள். எழுவிய - எழுப்பிய; குரல் எடுத்துப் பாடிய, எழுவு பகுதி, உறுகண் - வருந்துங்கண்; இக்காரியப்பெயர் கண்கலங்குதற்குக் காரணமான துன்பத்திற்கு வழங்கும். அலக்கண், இடுக்கண், பழங்கண், புன்கண் என்பனவுங் காண்க. | | |
|
|