பக்கம் : 151
 

அரசன் சென்று பணிதல்

193.

வென்றவன் றிருநகர் விளங்கு வேதிகை
முன்றில்சேர்ந் திருந்தனர் 1முனிவ ராதலும்
மின்றவழ் விளங்குவேல் வென்றி வேந்தனும்
சென்றவர் திருந்தடி முடியிற் றீட்டினான்.
 

     (இ - ள்.) முனிவர் - அந்தச் சமணமுனிவர்கள்; வென்றவன் திருநகர் - காமனை
வென்றவனான அருகக்கடவுளின் திருக்கோயிலின்கண்; விளங்கு வேதிகை முன்றில் -
மிளிருகின்ற மேடையையுடைய முன்னிடத்தை; சேர்ந்து இருந்தனர் ஆதலும் - அடைந்து
அங்கு வீற்றிருந்த அளவில்; மின்தவழ் விளங்குவேல் வென்றி வேந்தனும் - மின்போல்
ஒளிபொருந்தி விளங்குகின்ற வேற்படையையுடைய வெற்றிமிக்க அரசனும்; சென்று -
அம்முனிவர்களை யடைந்து; அவர் திருந்து அடிமுடியில் தீட்டினான் - அச்சமண
முனிவர்களுடைய அழகிய திருவடிகளைத் தன்னுடையமுடி தேய்க்குமாறு விழுந்து
பணிந்தான், (எ- று.)

     அரசனுக்குத் தருமோபதேசம் செய்யவேண்டும் என்னும் எண்ணத்துடன் அமர்ந்த
சமணமுனிவர்களை அரசன் பணிந்தான். காமனையும் ஐம்பொறிகளையும் காதி
கர்மங்களையும் வென்றவனாதல் பற்றி அருகக் கடவுளுக்கு, “ வென்றான் வென்றவன்“
என்னும் பெயர்கள் வழங்கும். முன்றில் - இல்முன்; இருப்பிடத்தின் முன்பக்கம், இலக்கணப்
போலி.
 

( 75 )

முனிவர்கள் அரசனுக்கு வாழ்த்துரை கூறி
அமரச் செய்தல்
194. பாசிடைப் பரப்புடைப் பழன நாடனை
ஆசிடை கொடுத்தவ ரிருக்க வென்றலும்
தூசுடை மணிக்கலை மகளிர் சூழ்தர
ஏசிடை யிலாதவ னிருக்கை யெய்தினான்.
 

     (இ - ள்.) அவர் - அந்தச் சமணமுனிவர்கள்; பாசு இடைப்பரப்பு உடைப்பழனம்
நாடனை - பயிர் மிகுதியினால் பசுமையான நடுவிடங்களை யுடைய கழனிகள் சூழ்ந்த
நாட்டையுடையவனான சுவலனசடியரசனை; ஆசிடை கொடுத்து - வாழ்த்துக்கூறி; இருக்க
என்றலும் - நீயிருக்கக்கடவாய்
 


     (பாடம்) 1. முனிவராகலும்.