(இ - ள்.) ஆர் அருள் பயந்தனை - எல்லாவுயிர்கட்கு மிக்க தண்ணளியைச் செய்தாய், ஆழ்துயர் அவித்தனை - அடியார்களது மிகுந்த துன்பங்களைத் தீர்த்தருளினாய், ஓர் அருள் ஆழியை - ஒப்பற்ற அருளாகிய உருளையையுடையாய், உலகுடை ஒருவனை - உலக முழுவதையும் தனதாகவுடைய ஒப்பற்ற, ஓர்அருள் ஆழியை - தலைவனே! சீர்அருள் மொழிய - சிறந்த தண்ணளியுடன் சொல்லுஞ் சொற்களையுடையவனே; நின் திருவடி தொழுதனம் - உன் அழகிய அடிகளை வணங்கினோம் (எ - று.) ஆர் அருள் - நிறைந்த அருள்; வினைத்தொகை. “அறவாழி யந்தணன்“ என்பது அருகக்கடவுளுக்கு ஒரு பெயராதலால் “ஓரருளாழியை“ என்றார். |