பக்கம் : 174
 
  நங்கைநீ பிறந்ததற் பின்னை நங்குடி
வங்கநீர் வரைப்பெலாம் வணக்கப் பட்டதே.
 

     (இ - ள்.) கங்கைநீர் பாய்ந்துழி - கங்கையாற்றின் நீர் பாய்ந்த விடத்திலே, கடலும்
தீர்த்தம்ஆம் - கடலும் ஆடுதற்குரிய நன்னீரென்று மக்களால் போற்றப்பெறும் (இச்செய்தி)
அம்கண் நீர் உலகு எலாம் அறியப்பட்டது - அழகிய இடத்தையுடையதும் கடல்
சூழ்ந்ததுமான உலகத்தினர் எல்லோரானும் நன்கு அறியப்பட்டதாகும்; நங்கை -
பெண்களிற் சிறந்தவளே! நீ பிறந்ததன் பின்னை - நீ தோன்றியதற்குப் பிறகு, நம்குடி
நம்முடைய குலமானது, வங்கநீர் வரைப்பு எலாம் வணக்கப் பட்டது - மரக்கலங்கள்
செல்லப்பெற்ற கடலையெல்லையாகவுடைய வுலகத்தினர்களனைவராலும் வணங்கும்படியான
மேன்மையைப் பெற்றது. (எ - று.)

இயற்கையில் உவர்ப்புச் சுவையுடையதும். குடித்தல் நீராடல் முதலியவற்றிற்குத்
தகுதியற்றதுமான கடல், கங்கையாறு வந்து பாயப்பெற்றதனால் புண்ணிய தீர்த்தமாய்ச் சிறப்படைந்ததுபோல், இயல்பிற் பெருமையற்றிருந்த நமது குலம் நீ பிறந்ததனால் உலகத்திலுள்ள
எந் நாட்டவரும் வணங்கும்படியான மேன்மையை அடைந்தது என்பதாம். கங்கை முதலிய
புண்ணிய தீர்த்தங்கள் தோன்றுவதற்கு முன், கடல் பெருமை யற்றுச் சிறுமையுற்றிருந்த
தென்பதும் இச் செய்யுளால் உணரப்படும். வங்கம் நீர் - அலைகளையுடைய நீர்
எனினுமாம். பாய்ந்துழி - தொகுத்தல்.

( 104 )

இதுவுமது
223.

போதுலாந் தாமரை பூத்த பொய்கையைத்
தீதுலாங் கீழுயிர் தீண்டச் செல்லல
மாதுலா மடந்தைநீ பிறந்திம் மண்டில
மேதிலா ரிடைதிற மிகந்து நின்றதே.

    (இ - ள்.) போதுஉலாம் தாமரை பூத்த பொய்கையை - ஞாயிறு தோன்றுங்காலத்தில்
தவறாது மலருமியல்புள்ள தாமரை மலர்கள் மலரப்பெற்ற பொய்கையை, தீது உலாம் கீழ்
உயிர் தீண்டச் செல்லல - தீமை பொருந்திய கீழ்மைப் பட்ட உயிர்கள் தொடுதற்குச்
செல்லமாட்டா, மாது உலாம் மடந்தை - அழகு மிகுந்து விளங்கும் பெண்ணே, நீ பிறந்து -
நீ பிறந்ததனால், இம்மண்டிலம் - இந்த நாடு, ஏதிலார் இடை திறம் இகழ்ந்து நின்றது -
பகைவர்கள் தோற்றுப் பின்னிடும் படியாக அவர்களைக் கடந்து நின்றது.
(எ - று.)