அறிஞர்களாற் கூறப்பெற்ற, நுண்ணிய நூலின் அன்றி - நுட்பமான பொருளையுடைய அற நூல்களால் அல்லாமல், நுழைபொருள் உணர்தல் தேற்றார் - தாம் மேற்கொள்ளவேண்டிய செயல்களை நன்குணர மாட்டார்கள், எண்ணிய - உள்ளத்தின்கண் நினைத்த செயல்களை, துணிந்து செய்யும் சூழ்ச்சியும் இல்லை - உறுதியாக நிலைபெறச் செய்யும் அறிவுத்திறமும் அவர்கட்கு உண்டாக மாட்டாது (எ - று.) அன்றே : அசை. அரசர்கள் எத்தகையோரையும் வணங்கார். அவர்களை வணங்கச் செய்தலும் அரிது. ஆயினும் அவர்கள் அறிஞராற் செய்யப்பட்ட அற நூல்களைப் படித்தறிந்தாலல்லாமல் செய்யவேண்டிய செயல்களையும் விலக்கவேண்டிய செயல்களையும் அறியமாட்டார்கள். |