செய்யும் இயல்புடையவனாவான், அமைச்சர் ஆவார் - இனி அமைச்சர்களாகத் தக்கார் யாவரென்னின், செறிந்தவர் தெளிந்த நூலார் - நற்குண நற்செயல்கள் செறிந்துள்ள வரும் பன்னூல்களையும் நன்குணர்ந் தவர்களும், சிறந்தவை - நன்மை பயக்கக்கூடியவைகளை, தெரிந்து கூறி - ஆராய்ந்து அரசனுக்குச் சொல்லி; அறிந்தவை - தாங்கள் நன்மை யென்றுணர்ந்தவைகளை, இயற்றுகிற்கும் - தவறாமற் செய்விக்கும், அமைதியார் - தன்மையை யுடையவர்களாவர் (எ - று.) இதனால் அரசர் இயல்பும் அமைச்சர் இயல்பும் இயம்பப்பட்டன. |
(இ - ள்.) வாள்வலித் தடக்கை மன்னர் - வாட்படையின் ஆற்றலையும் பெரிய கையையுமுடைய அரசர்கள், வையகம் வணக்கும் வாயில் - உலகத்தைத் தம்மடிப்படுத்தும் வழி, தோள்வலி சூழ்ச்சி என்று இருவகைத் தொகையிற்று ஆகும் - தோளாற்றலும் அமைச்சர்களுடன் செய்யும் சூழ்ச்சித் திறனும் என்று இருவகையாக அளவுபடுத்திச் சொல்லப்பெறுவதாகும். ஆள்வலித் தானையார்கட்கு - போர் மறவர்களின் ஆற்றலில்மிக்க படையையுடைய அரசர்கட்கு, ஆதியது அழகிதேனும் - முதலாவதாகக் கூறப்பெற்ற தோள் ஆற்றல் சிறப்புடையதென்றாலும், கோள்வலிச் சீயம் ஒப்பீர்! - கொலை செய்யும் ஆற்றல் பொருந்திய அரிமாவைப் போன்றவர்களே!, சூழ்ச்சியே - குணம் என்றான் - அமைச்சர்களுடன் கலந்தெண்ணும் ஆராய்ச்சித் திறனே நல்லதன்மையோடு கூடியதென்றான் (எ - று.) அது : பகுதிப்பொருள் விகுதி. தோளாற்றல் அமைச்சர்களைக் கலந்தெண்ணுதல் என்னும் இரண்டனுள் அமைச்சர்களைக் கலந்து எண்ணுதலே உயர்ந்தது என்கிறான். |