பக்கம் : 20
 

சோர்ந்ததேன்; இறாலில் நின்றும் ஒழுகியதேனுமாம். குறிஞ்சிக்குப் பூக் காந்தளும்,
வேங்கையும், சுனைக்குவளையுமாம். காந்தள் மலரை மகளிர் கைக்கு உவமையாகக் கூறுவர்.

     “பன்னாளும் நின்ற விடத்தும் கணிவேங்கை, நன்னாளே நாடிமலர் தலால்“ வேங்கை
வான்செய் நாண் மெய்விரிந்தன என்றார். இனி-வான்மீனின் உருவமுடைய மலர்களை
மலர்ந்தன எனினுமாம். தேனெய்-இருபெயரொட்டு. இனிக் கைவிரிந்தன முதலியவற்றைக்
காந்தள் முதலியவற்றிற்கு அடை மாத்திரையாகக்கொண்டு காந்தள் முதலியன சோர்ந்ததேன்
குன்றெலாம் விரிந்தன என ஒரு தொடராக்கினுமாம்.

( 11 )

முல்லை நிலம்

18. கொன்றை யுங்குருந் துங்குலைக் கோடலும்
முன்றி லேறிய முல்லையம் பந்தரும்
நின்று தேன்நிரந் தூதவி ரிந்தரோ
மன்றெ லா மண நாறும ருங்கினே.
 
     (இ - ள்.) மருங்கின் - முல்லைநிலப் பக்கத்தில்; கொன்றையும்-கொன்றை
மரங்களிலும்; குருந்தும் - குருந்த மரங்களிலும்; குலைக்கோடலும் -
மலர்க்கொத்துக்களையுடைய காந்தட் செடிகளிலும்; முன்றில் அம்பந்தர் ஏறிய முல்லையும் -
வீட்டின் முன்றிலில் அமைத்த பந்தர்களிற் படர்ந்த முல்லைக்கொடிகளிடத்தும்; தேன்
நிரந்த-வண்டுகள் பரவி; நின்று ஊத - மொய்த்திருந்து ஊத; விரிந்து - அப்பூக்கள்
மலர்ந்து; மன்று எலாம் மணம்நாறும் - வெளியிடங்களிலெல்லாம் நல்ல மணத்தை வீசும்.
(எ - று.)

     முல்லை நிலத்தில் உண்டாகிய மணத்தை இப்பாட்டில் மொழிகின்றார். முல்லைக்கு
மரம் கொன்றையுங் குருந்தும். பூ முல்லையும் தோன்றியும்.

     முன்றில் அம்பந்தர் ஏறிய முல்லையும் என இயைத்துக் கொள்க. கோடல் -
வெண்காந்தள். அரோ - அசை. மன்று - வெளிமணனாறும்.

( 12 )

மருதம்

19. நாற விண்டன நெய்தலு நாண்மதுச்
சேறு விண்டசெந் தாமரைக் கானமும்