பக்கம் : 206 | | (இ - ள்.) திருமணி திகழும் பூணோய் - அழகிய மணிகள் விளங்கும் அணிகலன்களை யணிந்தவனே! மறம் தலைமயங்கி - தீவினையையே மேற்கொண்டு, வையத்து - இவ்வுலகத்தின்கண், ஒருவரை ஒருவர் வாட்ட - ஒருவரை மற்றொருவர் வருத்துதல் செய்ய இவ்வாற்றால், இறந்து - உயிர்கள் மிகுதியாக, அலையுறாமை நோக்கி - துன்பமுறாதபடி பார்த்து, இன்னுயிர் போலக் காக்கும் - அவற்றை இனிய தன்னுடைய உயிரைப் போலப் பாதுகாக்கும், அறம் தலைநின்ற - அறவழிக் கண்ணே சிறந்து விளங்குகின்ற, வேந்தர் அடிநிழல் அன்றி - அரசர்களுடைய அடி நிழலையல்லாமல், யார்க்கும் - எத்தகையோர்க்கும், சிறந்தது ஒன்று இல்லை கண்டாய் - சிறப்பானது மற்றொன்றுமில்லை அதனை நீ உணர்ந்து கொள்வாயாக! (எ-று.) உலகத்துயிர்கள் யாவுக்கும் அரசனுடைய செங்கோலை துணை என்க. “ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே, வேந்தமை வில்லாத நாடு“ என்றார் வள்ளுவனாரும் (குறள் - 740) | ( 27 ) | 267. | ஒருமையாற் றுன்ப மெய்து மொருவனை யும்மை யாலே திருமையான் முயங்குஞ் செல்வச் செருக்கொடு திளைப்ப நோக்கி இருமையு மொருமை யாலே யியற்றலி னிறைவன் போலப் பெருமையை யுடைய தெய்வம் பிறிதினி யில்லை யன்றே. | (இ - ள்.) ஒருமையால் துன்பம் எய்தும் ஒருவனை - அரசியல் நன்கு அமையாவழி இவ்வொரு பிறப்பிற்றானே பெரிதும் துன்பம் எய்து தற்குரியவனாகிய ஒருமனிதனை, உம்மையாலே - கழிந்த பிறப்பிலியற்றிய வினையாலே, திருமையால் முயங்கும் - நன்மையோடே பொருந்துதற்குக் காரணமான, செல்வச் செருக்கொடு - செல்வங்களின் நுகர்ச்சியாலே தோன்றாநின்ற களிப்புடனே, திளைப்ப - பொருந்தி மகிழும்படி, நோக்கி - தன் அருட்கண்ணாலே பார்த்து, ஒருமையாலே - இவ்வொரு பிறப்பின் மாத்திரையானே, இருமையும் இயற்றலின் - இம்மை மறுமைகளிரண்டி டத்தும் நுகர்தற்குரிய இன்பங்களை நுகரும்படி செய்தலால், இறைவன் போல - அவனுக்குத் தன் மன்னனைப்போன்ற, பெருமையை உடைய தெய்வம் - தொழுதற்குரிய சிறப்புடைய கடவுள், பிறிது - வேறொன்று. இனி இல்லை - ஆராய்ந்து காணுமிடத்தும் இல்லையாகும் (எ - று.) அன்று : ஏ, அசைகள். | | |
|
|