பக்கம் : 21
 
  ஏறி வண்டின 1மூன்றவி ழிந்ததேன்
ஊறி வந்தொழு கும்மொரு பாலெலாம்.
     (இ - ள்.) ஒருபால் எலாம் - அந்நாட்டின் ஒரு பக்கமாகிய மருத நிலத்து இடம்
எங்கும்; நாறவிண்டன நெய்தலும் - மணம் வெளிப்படும் படியாக மலர்ந்த கருநெய்தல்
மலர்களிலும்; சேறுவிண்ட நாள்மது செந்தா மரைக் கானமும் - சேற்றிலே உண்டான
நாட்காலத்தே தேன் ஒழுக மலர்ந்த செந்தாமரைப் பூக்களின் கூட்டத்திடத்தும்; வண்டு
இனம் ஏறி ஊன்ற - வண்டுகளின் கூட்டம் மேலே ஏறித் தம் கால்களை ஊன்றுதலால்;
இழிந்த தேன் ஊறி வந்து ஒழுகும் - சுரந்ததேன் ஊற்றெடுத்து வந்து வழிதலைச் செய்யும்
(எ - று.)

     மருதநிலத்தின் இடங்களில் பலவகை மலர்களும் வெளிப்படுத்திய தேன்,
ஊற்றெடுத்து ஒழுகிக்கொண்டிருக்கின்றனவென்க. நெய்தல்-நெய்தல் நிலத்திற்குரிய பூ;
மருதநிலத்தில் நெய்தற் பூவைக் கூறியது “எந்நில மருங்கிற் பூவும் புள்ளும், அந்நிலம்
பொழுதொடு வாராவாயினும், வந்த நிலத்தின் பயத்தவாகும்“ என்னும் புறனடைச் சூத்திரம்
பற்றி என்றோ; அன்றி அந்நாட்டில் நால்வகை நிலங்களும் நெருங்கியுள்ளன வெனத்
திணைமயக்கம் உணர்த்துதற் பொருட்டோ கூறினாரெனக் கொள்ளலாம்.

     சேறுவிண்ட செந்தாமரை;; நாள் செந்தாமரை; மதுச்செந்தாமரை எனத் தனித்தனி
கூட்டுக. “விழுந்த அஞ்சிறை வண்டினம்மிதிப்ப மெல்லரும்பு கிழிந்து வார்தருதேறலும்,“ என்றார். நைடதத்தினும்.

( 13 )

நெய்தல்

20. கோடு டைந்தன தாழையுங் கோழிருள்
மோடு டைந்தன மூரிக் குவளையும்
தோடு டைந்தன 2சூகமுங் கற்பகக்
காடு டைந்தன போன்றுள கானலே
 
     (இ - ள்.) கோடு உடைந்து அன தாழையும் - சங்கு உடைபட்டாற் போன்று மலர்ந்த
தாழைமலர்களும்; கோழ் இருள் மோடு உடைந்து அன - மிகுந்த இருளின் திரள் உடைந்து
சிதறினாற்போன்று மலர்ந்த; மூரிகுவளையும் - பரிய கரிங்குவளை மலர்களும்; தோடு
உடைந்தன - இதழ்
 

     (பாடம்.) 1. ஊன்றபிலுற்று தேன், 2. வாம்பலும்.