பக்கம் : 215
 
 

கஞ்சியல் வில்லோ யதுமற் றமரர்கள்
1துஞ்சிய லில்லாத் துறக்க மனைத்தே.
 

     (இ - ள்.) அஞ்சு இயல்வில்லோய் - அஞ்சுகின்ற இயல்பில்லாத வீரவேந்தனே!.
மஞ்சுஇவர் சென்னி மால்வரை வடமலை - முகில்களானவை தவழ்ந்து செல்லுகிற
முடிகளையுடைய வெள்ளிமலையின் வடபகுதியிலே, விஞ்சையர் வாழும் விழா அணி
நல்உலகு - வித்தியாதரர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற சிறப்பமைந்த நல்ல உலகம்
ஒன்றுஉள்ளது, அது - அந்த உலகமானது, அமரர்கள் - தேவர்களுடைய, துஞ்சுஇயல்
இல்லாத் துறக்கம் அனைத்து - சாக்காடெய்தும் இயல்பு இல்லாத விண்ணுலகத்தைப்
போன்றது (எ - று.)

பகைவர் அஞ்சுதற்குக் காரணமான இயல்புடைய வில்லையுடையோனே எனினுமாம்.
துஞ்சியல் - சாக்காடுறு மியல்பு; உறங்கு மியல்பு எனினுமாம். முதலில் அமைச்சன்,
ஊரைப்புகழத் தொடங்குகின்றான். நாட்டுவளம் மன்னர்கட்கு இன்றியமையாததாகலின
அதனை முன்னர் உணர்த்துகின்றான் என்க.

( 39 )

அது விண்ணுலகத்தைப் போன்றது

279. மண்ணியல் வாழ்நர்க்கும் வானுல கொப்பது
புண்ணிய மில்லார் புகுதற் கரியது
கண்ணிய கற்பகக் கானங் கலந்தது
விண்ணிய லின்பம் விரவிற் றினிதே.
 

     (இ - ள்.) அந்த வடசேடியானது, மண்இயல் வாழ்நர்க்கும் - மண்ணுலகிலே
வாழ்பவர்கட்கும், வான் உலகு ஒப்பது - விண்ணுலகத்தைப் போன்றது, புண்ணியம்
இல்லார் புகுதற்கு அரியது - நல்வினையற்றவர்கள் அடைதற்கு அருமையானது, கண்ணிய -
மேலாகக் கருதப்பெறுகிற, கற்பகக் கானங் கலந்தது - கற்பகக் சோலைகள் தன்னிடத்திலே
பொருந்தப்பெற்றது, இனிதே - இனிமையாக, விண் இயல் இன்பம் விரவிற்று - தேவருலக
இன்பமானது கலந்துள்ளது (எ - று.)

வடசேடி வானுலகத்தைப் போன்றது; நல்வினையற்றோர் அடை தற்கரியது; கற்பகச்சோலை
யமைந்தது; இன்ப மிக்குடையது என்க.

( 40 )


(பாடம்) 1. துஞ்சியல் வில்லாத்.