(இ - ள்.) மேலும் அந்த வடசேடியானது; எல்லா இருதுவும் - கார், கூதிர், முன்பனி, முன்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பருவக் காலங்களை யெல்லாம், ஈனும் பொழிலினது - உணடாக்குஞ் சோலை களையுடையது, எல்லாநிதியும் இயன்ற இடத்தினது - சங்கநிதி பதுமநிதி முதலிய எல்லாச் செல்வங்களும் அமைந்த இடத்தையுடையது, இராப்பகல் இரவும்பகலும், எல்லா அமரர் கணமும் - எல்லாத் தேவர்களுடைய கூட்டங்களும், எல்லாப் புலமும் நுகர்தற்கு இனிது - மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளாலும் நுகர்தற்குரிய எல்லாப் புலன்களையும் உடைமையான் மிகவும் இனிமையை யுடையது. (எ - று.) இதனால் பொழில் நலத்தையும் பொருள் நலத்தையும் உணர்த்தினான். இருது - பருவம். புலம் - ஐம்புலன்கள். சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன. |
(இ - ள்.) பொய்கையுள் - அவ்வுத்தர சேடிக்கண் உள்ள வாவிகள்தோறும், பூப்பன - மலர்வன, பொன் இதழ் தாமரை - பொன்னிறமான இதழ்களையுடைய தாமரை மலர்களேயாம். பொழில் வாய் - அங்குள்ள பூஞ்சோலைகளிடத்தே, அவிழ்ப்பன - இதழ்விரி்த்து மலர்வன, பொன் இதழ் - பொன்னிற இதழ்களையுடைய, தாமம் - புனையப்பட்ட மாலைகளை ஒத்த கோட்டுப் பூக்களேயாம், மணிநிலம் - அழகிய தரையிடமெங்கும், போர்ப்பன - மறைத்துக் கிடப்பன, பொன் இதழ்த்தாது - |