பக்கம் : 233
 

சுயம்பிரபை பிறந்த பிறகு அச்சுவக்கிரீவன் கப்பம் வங்கா திருத்தலுக்குக் காரணம்,
சுயம்பிரபையைத் திருமணஞ் செய்து கொள்ளுதல் வேண்டும் என்னும் குறிப்பினாலேயோம
என்று அமைச்சன் சுவலனசடிக்கு உணர்த்துகின்றான் என்க.

( 67 )

சுயம்பிரபையை அவனுக்கு செய்விக்கலாம்
என்றல்

306. மற்றவற் குரிய ணங்கை யென்பதென் மனத்தி னோடு
முற்றுவந் துளது சால வுறுதிய முடைய தொக்கும்
வெற்றிவேல் விஞ்சை யாரு மஞ்சுவர் மின்செய் பைம்பூண்
கொற்றவ குறிப்புண் டாயிற் கொடுப்பது 1குணங்கொ லென்றான்.
 

     (இ - ள்.) மின்செய் பைம்பூண் கொற்றவ - மின்னு தலைச் செய்கின்ற பசிய
அணிகலன்களை யணிந்த அரசனே!, அவற்கு உரியள் நங்கை என்பது என்
மனத்தினோடும் உற்று வந்துளது - அவ்வச் சுவக்கிரீவனுக்கு உரியவள் சுயம்பிரபை
யென்னும் எண்ணம் என்னுள்ளத்தில் பொருந்தத் தோன்று கின்றது, சால உறுதியும்
உடையது ஒடுக்கும் - கொடுப்பது நமக்கு மிகுந்த உறுதிப்பாட்டையு மளிக்கும், வெற்றிவேல்
விஞ்சையாரும் அஞ்சுவர் - வெற்றிமிக்க வேற்படையை யுடைய வித்தியாதர மன்னர்களும்
நம்மைக் கண்டு அஞ்சுவார்கள், கொடுப்பது குணம் என்றான் - அவ்வாறு கொடுப்பது
நல்ல தாகுமென்று கூறினான். மற்று, கொல் : அசைநிலை.

இதுவரையில் திருமணத்திற்கு அச்சுவக்கிரீவன் தக்கவன் என்னும் எண்ணம் அரசன்
மனத்தில் உண்டாகுமாறு பேசிய அமைச்சன் இப்பாட்டினால் தனது எண்ணத்தையும்
வெளிப்படுத்தினன் என்க.

( 68 )

பவச்சுதன் என்பவன் கூறத் தொடங்குதல்

307. 2சுடர்மணி மருங்கற் பைங்கட் சுளிமுகக் களிநல் யானை
யடர்மணிக் கதிரும் பைம்பொன் மாலையு மணிந்த சென்னித்
3தொடர்மணிப் பூணி னாற்குச் சுச்சுதன் சொல்லக் கேட்டே
படர்மணிப் படலை மாலைப் பவச்சுதன் பகர லுற்றான்.
 

     (இ - ள்.) சுடர்மணி மருங்கல் - ஒளிவிடுகின்ற மணிகள் அணிந்த பக்கத்தையும்,
பைங்கண் - பசிய கண்களையும், சுளிமுகம் - சினக்கின்ற முகத்தையும், களி -
களிப்பினையும் உடைய, நல்யானை - நல்ல யானைப்


(பாடம்) 1. குணமதென்றான். 2. தொடர். 3. சுடர்.