பக்கம் : 234 | | படையை உடையவனும், அடர்மணிக் கதிரும் - நெருங்கிய மணிக் கோவையையும், பைம் பொன்மாலையும் - பசிய பொன்னரிமாலையும் அணிந்த, சூடிய சென்னி - திருமுடியை உடையவனும் ஆகிய, தொடர்மணிப் பூணினாற்கு - நீண்ட மணியணிகளைப் புனைந்த சுவலனசடி அரசனுக்கு, சுச்சுதன் சொல்லக்கேட்டு - சுச்சுதன் என்னும் அமைச்சனானவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்து, படர்மணிப் படலை மாலைப் பவச்சுதன் - ஒளிபரவிய மணிமாலையையும் தளிர் மாலையையும் அணிந்த பவச்சுதன் என்னும் அமைச்சன், பகரல் உற்றான் - தன் எண்ணத்தைச் கூறத்தொடங்கினான், (எ - று.) இதுவரையில் சுச்சுதன் அரசனுக்குக் கூறியவைகளைக் கேட்டக் கொண்டிருந்த பவச்சுதன் என்பவன் இப்பொழுது தன்னுடைய எண்ணத்தைக் கூறத் தொடங்கியிருக்கிறான். யானை, ..........பட்டத்து யானை எனினுமாம். | ( 69 ) | வேறு சுச்சுதன் சொல்லியவை உண்மை என்றல் | 308. | நூலா ராய்ந்து நுண்பொறி கண்ணு நொடிவல்லான் மேலா ராயு மேதைமை யாலு மிகநல்லான் தோலா நாவிற் சுச்சுதன் சொல்லும் பொருளெல்லாம் வேலார் கையாய் மெய்ம்மைய வன்றே 1மிகையாலோ. | (இ - ள்.) வேலார் கையாய் - வேற்படை பொருந்திய கையையுடையவனே! நூல் ஆராய்ந்து - நூல்களை ஆராய்ச்சி செய்து, நுண்பொறி கண்ணும் - நுண்ணிய பொருளைக் கண்டுணரும், நொடிவல்லான் - சொல்வன்மையை யுடையவன், மேலார் ஆயும் - மேலானவர்கள் ஆராயும், மேதைமையாலும் மிக நல்லான் - அறிவுடை மையாலும் மிகச் சிறந்தவன், தோலாநாவிற் சுச்சுதன் - சொல்லாற் பிறர் தன்னை வெல்ல மாட்டாத வன்மை படைத்த சுச்சுதன், சொல்லும் பொருள் எல்லாம் - கூறுஞ்செய்திகள் யாவும், மெய்ம்மைய - உண்மை யானவைகளாம், மிகை அன்று - மிகுதிப்படுத்திச் சொல்வ தன்று, ஏ, ஆல், ஓ: அசைநிலைகள். (எ - று.) |
| (பாடம்) 1. மிகையாலும். | | |
|
|