(இ - ள்.) என்று அன்று அச்சாதக ஓலை - என்று அக்காலத்தே அவட்கு அச்சாதக ஓலையன்கண், எழுதிற்று - எழுதப்பட்டுள்ளது, ஆதலால், குன்றா வென்றி - குறையாத வெற்றியையும், குன்று உறழ் - மலையை ஒத்த, யானை - யானையையும், கொலை வேலோய் - கொலைத் தொழில் மிக்க வேலினையும் உடைய மன்னனே, நன்றாம் நங்கைக்கு - மேற்கூறிய நன்மையுண்டாதற்குரிய நம் சுயம்பிரபைக்கு, காமப் பருவத்தால் - காமம் நுகர்தற்குரிய இளம்பருவத்தோடே, நின்றான் அன்றே - நிற்பவன் அல்லனோ, ஒன்றிய - பொருந்திய, இன் துணை ஆகும் - இனிய காதல னாகின்ற, நிலைமேயான் - நிலைமையினை உடையன் ஆகுவான், (எ - று.) எனவே அகவையான் மிக்க அச்சுவகண்டன் அவட்குக் காதலனாகான் என்றானாயிற்று. |
(இ - ள்.) சூழிக்கோலச் சூழ்களியானை - முகபடாத்தினால் அழகு படுத்தப்பெற்றுப் பலவாகசச் சூழ்ந்த களிப்புடைய யானைகளையும், சுடர் வேலோய் - ஒளி செய்கின்ற வேற்படையையுமுடைய அரசனே!, ஆழிக்கோமான் அச்சுவகண்டன் அவனுக்கு - உருளைப்படையை யேந்திய அரசனாகிய அச்சுவக்கிரீவனுக்கு, ஊழிக்காலம் - வாழ்நாள், ஊழிக்காலம் போன்று பெரிதும் கழிந்தன; என்னும் உரையாலும் - உன்று உலகத்தவர் கூறுஞ் சொற்களாலும், தாழிக்கோலப் போது அன கண்ணாள் தகுவாளோ - தாழியில் வைத்து வளர்க்கப்பட்ட அழகு பொருந்திய குவளைப்பூவையொத்த |