(இ - ள்.) பொய்கை-அந்நாட்டுத் தடாகங்கள் : சுரும்பொடு கள் அறாத செந்தாமரைக் கானகத்துள்-வண்டுந்தேனும் நீங்கப் பெறாத செந்தாமரை மலர்த்தொகுதியின் இடையே; புள் அறாதுதைந்து-பறவைகள் நீங்காவாய்ப் பொருந்தியிருந்து; துள் இறாக்கவுள் கொண்டு-துள்ளாநின்ற இறாமீனை எளிதாக வாயிற் பற்றிக்கொண்டு; ஓகை இரட்டுற-எதிர்பாராதவாறு இரைகிடைத்தலின் தம் மகிழ்ச்சியானது இரட்டிப்பாக; அறாதுபுலம்பின-இடைவிடாது ஒலிக்கப் பெறுதலையுடையன (எ - று.) அந்நாட்டுப் பொய்கையில் என்றும் ஒலி நீங்கப்பெறாதிருத்தலை இச்செய்யுளாற் கூறினார். மருதத்திற்குப் புள் தாராவும் நீர்க்கோழியுமாம். மருதநிலச் சிறப்பைக் கூறத் தொடங்கிய இளங்கோவடிகள், |
|
| “கழனிச் செந்நெற் கரும்புசூழ் மருங்கில் பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக் கம்புட் கோழியுங் கனைகுரல் நாரையும் செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும் கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும் உள்ளு மூரலும் புள்ளும் புதாவும் வெல்போர் வேந்தர் முனையிடம் போலப் பல்வேறு குழூஉக்குரல் பரந்த வோதையும்“ |
என்றார். பொய்கை, மக்களால் உண்டாக்கப் பெறாத நீர்நிலை என்பர். துள்ளிறா-வினைத்தொகை. சுரும்பு-வண்டின் சாதி பேதங்களுள் ஒன்று. ஓகை, உவகை என்பதன் மரூஉ. சில ஏட்டுப் பிரதிகளில் மூன்றாவதடி, “உள்ளு றாதுதைந் தோகை யிரண்டுற“, “உள்ளிருக்கவுட்டோகை யிரட்டுற“ என்றுங் காணப் பெறுகின்றன. |
( 17 ) |
நெய்தல் |
24. | வெண்மு ளைப்பசுந் 1தாமரை மென்சுருள் முண்மு ளைத்திர ளோடு 2முனிந்துகொண் டுண்மு ளைத்திள வன்ன முழக்கலால் கண்மு ளைத்த தடத்த கழியெலாம். |
(இ - ள்.) வெண்முளைப் பசும் தாமரை மென்சுருள்-வெள்ளிய முளையினையுடைய பசிய தாமரையின் மெல்லிய இலைச் சுருளை; |
|
(பாடம்.) 1. தாமரைச் செஞ்சுருள், 2. முரிந்துகொண்டு. |