பக்கம் : 244
 

ஒளி முடியரசன் செம்மல் - திரண்ட கல்லைப்போலமைந்து வயிரம் பொருந்திய திண்ணிய
தோளையும் ஒளி தாங்கிய முடியையுமுடைய அரசன் மகன், அலங்கள் அம்புரவித்தானை -
அசைகின்ற மாலையினையணிந்த அழகிய குதிரைப் படையை யுடையவன், அருங்கலத்
தேரின் பேரன் - சுவர்ணரதன் என்னும் பெயரையுடையன், குலங்கெழு குரிசில் -
நற்குடியில் தோன்றிய சிறப்பையுடையவன், கொண்டல்வான் உருமோடு ஒப்பான் - முகிலில்
தோன்றுகின்ற பேரிடியை ஒத்தவன், கண்டாய் - உணர்ந்து கொள்வாயாக, (எ - று.)

சுவர்ணரதன் என்னும் பெயரைத் தமிழில் பெயர்த்துச் சொல்ல விரும்பியவர் ‘அருங்கலத்
தேரின் பேரன்‘ என்றார். அருங்கலம் பொன்னை ஈண்டு உணர்த்திற்று.

( 84 )

கீதமாபுரத்தரசன் மகன் அரிகண்டன்

323. நங்கண்மால் வரையின் மேலோன் நன்னகர் கீத மென்னும்
திங்கண்மால் புரிசை வேலிச் 1செழுநக ரரசன் செம்மல்
அங்கண்மா ஞால மாளு மரிகண்ட னவனை விண்மேல்
செங்கண்மான் முனியு மேனுஞ் செய்வதொன் றில்லை
கண்டாய்.
 

     (இ - ள்.) திங்கள்மால் புரிசை வேலி - திங்கள் மண்டலம் வரை யுயர்ந்துள்ள
பெரிய மதிலை வேலியாகக்கொண்ட, நன்னகர்கீதம் என்னும் - நல்ல நகரமாகிய கீதமாபுரம்
என்று சொல்லப்பெறுகிற; செழுநகர் அரசன் செம்மல் - செழுமை மிக்க நகரத்தினை
ஆட்சிபுரியும் அரசனுடைய தலைமகன், அங்கண்மா ஞாலம் ஆளும் அரிகண்டன் -
அழகிய இடமகன்ற பெரிய நிலவுலகத்தை அரசாட்சி செய்யும் அரிகண்டன் என்னும்
பெயரையுடையவன், நங்கள்மால் வரையில் மேலோன் - அவன் நம்முடைய வித்தியாதர
மலையரசர்களுக்குள்ளே சிறந்தவன், அவனை விண்மேல் செங்கண்மால் முனியுமேனும் -
அவ்வரி கண்டனை விண்ணின் கண்ணுள்ள சிவந்த திருக்கண்களையுடைய திருமாலே
சினந்தாலும், செய்வது ஒன்று இல்லை கண்டாய் - செய்யக்கூடியது யாதுமில்லை, உணர்ந்து
கொள்வாயாக! (எ - று.)


(பாடம்) 1. செழு நகரரைசன்.