பக்கம் : 248
 

வண்டுகள் குண்டு குண்டாகக் காணப்படுதலின் “சிறைவன் டென்னும் கருமணி“ என்றார்.

( 88 )

சீ நிலையத்தரசன்மகன் சித்திரரதன்

327. சீரணி முழவ மோவாச் 1சிரீநிலை யதனை யாளும்
காரணி தடக்கை வேந்தன் கான்முளை கனபொ னார்ந்த
தேரணி யரவத் தானைச் சித்திரத் தேரின் 2பேரான்
தாரணி 3மார்பனன்றெ தரணிக்கோர் திலத மாவான்.
 

     (இ - ள்.) சீர்அணி முழவம் ஓவா - சிறப்புப் பொருந்திய அழகிய மத்தளவொலி
நீங்கப்பெறாத, சிரீநிலை அதனை ஆளும் - திருநிலையம் என்னும் நகரத்தினை அரசாட்சி
புரிகின்ற, கார் அணி தடக்கை வேந்தன் கான்முளை - கொடையினால் முகிலைப் போலும்
அழகிய பெரிய கைகளையுடைய அரசன் மகனும், கனபொன் ஆர்ந்த தேர் அணி
அரசத்தானை - அழகிய பொற்றகடுகள் பதிக்கப்பெற்ற தேரையும் இனிய ஒலி மிக்க
படையையுமுடைய, சித்திரத்தேரின் பேரான் - சித்திர ரதன் என்னும் பேரையுடையவன்,
தார் அணி மார்பன் அன்றே - மாலையால் அழகு பெற்ற மார்பினையுடைய
அவனல்லனோ, தரணிக்கோர் திலதமாவான் - உலகிற்கு மிகச் சிறந்தவனாக
விளங்குகின்றவன், (எ - று.)
சித்திர ரதன் மிகவும் சிறந்தவன் என்றபடி.

கனக பல்லவத்தரசன் மகன் சிங்ககேது

328. கற்றவர் புகழுஞ் சீர்த்திக் கனகபல் லவத்தை யாளும்
கொற்றவன் சிறுவன் கோலக் குங்குமக் குவவுத் தோளான்
செற்றவர்ச் செகுக்குஞ் செய்கை 4செருவல்லான் சிங்ககேது
மற்றவன் பிறந்த பின்னா மண்மகள் மகிழ்ந்த தென்றான்.
 

( 89 )

     (இ - ள்.) கற்றவர் புகழுஞ் சீர்த்தி - அறிஞர்களால் விதந்தோதப் பெறுகிற மிகுந்த
புகழையுடைய, கனகபல்லவத்தையாளுங் கொற்றவன் சிறுவன் - கனகபல்லவம் என்னும்
நகரத்தை அரசாட்சி செய்கின்ற அரசனுடைய மகனும், கோலக் குங்குமக் குவவுத்தோளான்
- அழகிய


(பாடம்) 1. சிறீநிலை. 2. பேரத். 3. மார்பனென்றே. ஸ்ரீநிலை சிறிநிலை. 4. செருவில்லான்.