பக்கம் : 25
 
     முள்முளைத் திரளொடு-முள்பொருந்திய நாளங்களுடன்;
முனிந்துகொண்டு-வெறுத்துக்கொண்டு; உள்முளைத்து-நீர்க்குள் மூழ்கியெழுந்து; இள
அன்னம் உழக்கலால்-அன்னப் பார்ப்புக்கள் நீரைக் கலக்குதலால்; தடத்தகழி
எலாம்-பெரியகழியிடமெல்லாம்; கள் முளைத்த-தேன் தோன்றலாயின (எ - று.)

     கண்முளைத்த தடத்த எனப் பிரித்துக் கண்கள் தோன்றி மலர்ந்தாற் போன்ற
இடத்தையுடையன என்று பொருள் கூறினும் பொருந்தும். வெண்முளைப்
பசுந்தாமரை-முரண்டொடை. மரஞ்செடி கொடி வகைகளுக் குள்ள, கோழரை, பொரியரை,
பொகுட்டரை, முள்ளரை என்னும் நான்கு வகையுள் தாமரை முள்ளரையுடையது.
தடத்த-பலவின்பால் முற்று. கழி-கடற்கரையை ஒட்டிய உப்பங்கழி.

( 18 )

குறிஞ்சி

25. காந்த ளங்குலை யாற்களி வண்டினம்
1கூந்தி ளம்பிடி வீசக்கு ழாங்களோ
டேந்து சந்தனச் சார லிருங்கைமா
மாந்தி நின்றுறங் கும்வரை மாடெலாம்.
     (இ - ள்.) வரைமாடு எலாம்-மலைப்பக்கங்களிலெல்லாம்; ஏந்துசந்தனம்
சாரல்-உயர்ந்த சந்தனமரங்கள் செறிந்த சாரலில்; இரும்கைமா-பெரிய கையினையுடைய
களிறுகள்; களிவண்டு இனம்-தம்மத நீரைப்பருகிக் களிக்கின்ற வண்டுக் கூட்டத்தை; கூந்து
இளம்பிடி-கூந்தலையுடைய இளம் பிடியானைகள்; காந்தள் அம்குலையால் வீச-அழகிய
காந்தட் பூங்கொத்தினால் வீசியோட்ட; குழாங்களோடு நின்று மாந்தி - மற்றை யானைக்
கூட்டத்தோடு சேர்ந்து தினை முதலியவற்றை உண்டு; உறங்கும் - தூங்கும்.

     ஆண் யானைகள் தினை முதலியவற்றைத் தின்றுவிட்டுத் தம் குழாத்துடன்
உறங்குகின்றன; அவற்றின் மதநீரில் வண்டுக் கூட்டங்கள் இடைவிடாது மொய்த்துக்
களிற்றின் உறக்கத்தைக் கெடுக்கின்றன; வண்டுக் கூட்டங்கள் ஆண் யானைகளின்
உறக்கத்தைக் கெடுத்தல் அவற்றின்பால் அன்புள்ள பிடிகளுக்குப் பொறுக்கவில்லை.
ஆகவே அவை காந்தளங் குலையினால் வண்டுக்கூட்டத்தை யோட்டி ஆண் யானை
உறங்குதற்கு உதவிபுரிகின்றன. இதனால் அப்பிடிகள் களிற்றினிடத்திற் கொண்டுள்ள
காதலும் அன்பும் புலனாம். மக்கட்கு அடுத்தபடியாகப் பகுத்தறிவோடுகூடிய

     (பாடம்.) 1. விடத்தி.