பக்கம் : 250
 
330.

ஈங்கிவர் தம்முள் யாவ 1ரிலங்கிரும் பவழச் செவ்வாய்க்
கோங்கிவர் குவிமென் கொங்கைக் கொம்பினுங் குரிய காளை
ஆங்கவன் 2றன்னை யாராய்ந் தறிந்தருள் செய்க வென்றான்
வாங்கிரும் பரவை முந்நீர் மணிகொழித் தனைய சொல்லான்.
 

     (இ - ள்.) வாங்கு - உலகத்தைச் சூழ்ந்து வளைந்துள்ள, பரவை முந்நீர்
மணிகொழித்தனைய சொல்லான் - பரந்துள்ள கடலில் தோன்றிய மணிகளைத்
தெரிந்தெடுத்தாற் போன்ற சொல்லையுடைய பவச்சுதன், ஈங்கு இவர்தம்முள் -
இங்கெடுத்துக் கூறப்பட்ட இவர்களுக்குள்ளே, இலங்கு இரும்பவழச் செவ்வாய் -
விளங்குகின்ற பெரிய பவழம் போன்ற சிவந்த வாயினையும், கோங்கு இவர் குவிமென்
கொங்கைக் கொம்பினுக்கு - கோங்கரும்பு போலும் குவிந்தமெல்லிய
கொங்கைகளையுமுடைய பூங்கொம்பு போல்வளாகிய சுயம்பிரபைக்கு, உரிய காளையாவர் -
உரிய தலைவன் யாவனாதல் கூடும், அவன் தன்னை ஆராய்ந்து அறிந்து - அவனைத்
தேர்ந்துஎடுத்து, அருள் செய்க என்றான் - கொடுத்தருள்க என்று கூறினான். ஆங்கு -
அசைநிலை, (எ - று.)

இவர்களுள் ஒருவனைத் தெரிந்தெடுத்து அவனுக்குச் சுயம்பிரபை யைக் கொடுப்பாயாக
என்று கூறி முடிக்கிறான்.

( 92 )

வேறு
பவச்சுதன் கூறியவற்றிற்கு எல்லாரும் உடன்படுதல்

331. 3மன்னர் நீண்முடி மென்மணித் தொத்தொளி
துன்னு சேவடி யாற்குச் சுருங்கவே
பன்னு கேள்விப் பவச்சுதன் சொல்லனும்
அன்ன தே 4யென்றெல் லார்களு மொட்டினார்.
 

     (இ - ள்.) மன்னர் நீள்முடி - பணிகின்ற அரசர்களுடைய நீண்ட முடியின்,
மென்மணித் தொத்து ஒளி - மெல்லிய மணித்திரளின் ஒளியானது, துன்னு சேவடியாற்கு -
பொருந்திய சிவந்த அடிகளையுடையவனாகிய சுவலனசடியரசனுக்கு, சுருங்கவே -
சுருக்கமாகவே, பன்னுகேள்விப் பவச்சுதன் சொல்லலும் - ஆராய்ந்தறிந்த நூற்
கேள்வியையுடைய


(பாடம்) 1. இலங்கிடும், மன்னை. 2. மின்னு. 4. என்றெல்லார்களும்.