(இ - ள்.) காம்பின் வாய்ந்த - மூங்கிலை ஒத்த, மென்றோளி - மெல்லிய தோளையுடைய சுயம்பிரபை, அக் காதலன் - அந்தக் காதலுடை யோனின், தீம் பல் மாலை - இனிய பல மாலைகளை அணிந்த, நன் மார்பகம் - நல்ல மார்பினை, சேருமேல் - கூடுவாளாயின், ஆம்பல் மாலையும் - ஆம்பல் மலரின் வரிசையும், ஆய் கதிர்த் திங்களும் - நுண்ணொளியையுடைய திங்கள் மண்டிலமும், தாம் - தம்முள்ளே, பன் மாலையும் - பலவாகிய மாலைக் காலந்தோறும், சார்ந்தது - பொருந்தியதனை அனைத்து - ஒப்பாகும். (எ - று.) திங்களின் வருகையால் ஆம்பல் மலரும், ஆதலின் திங்களை ஆம்பலின் காதலனாகக் கூறுதல் கவிமரபு. |
(இ - ள்.) இதுவும் அடுத்த செய்யுளும் ஒருதொடர் (இ - ள்.) நம்பி தங்கை - அந்த விச்சுவனுடைய தங்கை யானவள், நகைமலர்க் கொம்பின் அன்னவள் - விளங்குகின்ற மலர்கள் பொருந்திய கற்பகக்கொம்பைப் போன்றவள், கொங்கு அணி கூந்தலாள் - நறுமணம் அழகு செய்யப்பெற்ற கூந்தலையுடையவள், அம்பில் நீண்டு - அம்பைப் போல் நீட்சியையுடையதாய், அரிசிந்திய - செவ்வரிகள் மிகப்பெற்ற, மாக்கயல் வம்பில் நீண்ட - அழகிய கயல்மீன்களைப்போன்று புதுமையுடன் நீண்டுள்ள, மைவாள் நெடுங்கண்ணினாள் - மை தீட்டப்பெற்ற ஒளிபொருந்திய நெடிய கண்களையுடையவள் (எ - று.) விச்சுவன் தங்கையை ஈண்டெடுத்துக் கூறக் காரணம் மேலே விளங்கும் |