பக்கம் : 258
 

அவளுடைய பெயர் சோதிமாலை

344.

கோதின் மாலைகள் மேற் 1குதி கொண்டெழு
கீத மாலைய கின்னர வண்டினம்
2ஊதி மாலைய வாயுறை யுங்குழல்
சோதி மாலையென் பாள்சுடர்ப் பூணினாள்.
 

      (இ - ள்.) கோதின் மாலைகள் மேக்குதி கொண்டு எழு - குற்றமற்ற மாலைகளின்
மேல் குதித்தலைக்கொண்டு எழுகின்ற, கீத மாலைய கின்னர வண்டினம் -
இசைவரிசைகளில் அமைந்த கின்னரம் என்னும் பண்ணைப் பாடுகின்ற வண்டுகளின்
கூட்டம், குழல் மாலையவாய் ஊதி உறையும் - கூந்தலிடத்திலே அணியப்பெற்ற மாலையில்
ஊதித் தங்குதலையுடைய வளும், சுடர்ப்பூணினாள் - ஒளிமிக்க அணிகலன்களை
யணிந்தவளுமாகிய அவள், சோதிமாலை என்பாள்-கோதிமாலை என்னும்
பெயரையு டையவள் (எ-று.)

( 106 )

சோதிமாலை அருக்ககீர்த்திக்குரியவள் எனல்

345. வெம்பு மால்களி யானை விலக்குநீர்
நம்பி 3ஞாயிறு சேர்பெய ராற்கணி
அம்பி னீளரி வாணெடுங் கண்ணவள்
வம்பு சேர்முலை வாரி வளாகமே.
 

      (இ - ள்.) வெம்பு மால் களி யானை - சினத்தாலே வெம்புகின்ற பெரிய
மதமயக்குடைய யானையினை, விலக்குநீர் நம்பி - வென்று களையும் நீர்மையுடைய
சிறந்தோனாகிய, ஞாயிறு சேர் பெயராற்கு - அருக்ககீர்த்திக்கு, அம்பில் நீள் -
அம்புபோலே நீண்ட, அரி - வரிபரந்த, வாள் - ஒளிமிக்க, நெடுங் கண்ணவள் - நெடியி
கண்ணையுடைய சோதிமாலையின், வம்பு சேர் - கச்சணியப்பெற்ற, வாரி வளாகம் முலை -
இன்ப வருவாயினையுடைய இடமாகிய முலை, அணி - அணிகலனாகத் திகழும் (எ - று.)

அருக்க கீர்த்தி அச் சோதிமாலையை மணந்துகொண்டால் அவனுக்கு மிகப் பெருமையுண
டாகும் என்றபடி, மங்கலம் என்ப மனைமாட்சி என்று கூறப்படுதலால் மனைவியை அணி
என்றான் என்க.


(பாடம்) 1. கொதி. 2. ஊதுமாலைய. 3. ஞாயறு நாயறு.