பக்கம் : 259
 

இனி வாரி - யானைக்கூடமுமாம்; ஆகவே கண்ணவள் முலை ஞாயிறுசேர் பெயரானாகய
களிற்றியானையைக் கட்டிவைக்குமிடமுமாம் என விரித்தலுமாம்.

( 107 )

சுதசாகரன் முடிவுரை

346. இன்ன வாறிசை யப்பெறின் யாவரும்
என்ன வாறு மிகப்பவ ரின்மையால்
அன்ன வாறரு ளுண்டெனி லாய்ந்தியான்
சொன்ன வாறுகொண் டீசுடர் 1வேலினோய்.
 

     (இ - ள்.) சுடர் வேலினோய் - ஒளியமைந்த வேற்படையையுடைய வனே, இன்ன
ஆறு இசையப்பெறின் - நான் கூறியபடி இவ்வாறு அமையப்பெற்றால், யாவரும்
என்னவாறும் இகப்பவர் இன்மையால் - எத்தகையோரும் எவ்வாறும் மறுக்க
மாட்டார்களாகையால், அன்ன ஆறு அருள்உண்டெனில் - அவ்வாறு செய்வதற்கு
மனமுள்ளதாயின், ஆய்ந்து யான் சொன்னவாறு கொண்டீக - ஆராய்ச்சி செய்து நான்
சொன்னபடி கொடுப்பாயாக! (எ - று.)
சுதசாகரன் தன்னுரையை இத்துடன் முடித்துக்கொள்கிறான்.

( 108 )

சுமந்திரி என்பவன் கூறத்தொடங்குதல்

347. கொங்குவண்2 டலைந்த தாரான் குறிப்பறிந் திவைக ளெல்லாம்
அங்கவன் மொழிந்த பின்னை யவனையு மமைதி கூறி
நங்கைதன் றாதை தோழர் நால்வரு 3ணால்வ னாவான்
தொங்கலந் துணர்கொள் மார்பிற் சுமந்திரி சொல்ல லுற்றான்.
 

     (இ - ள்.) கொங்குவண்டு அலைந்த தாரான் குறிப்பு அறிந்து - தேனை நாடுகிற
வண்டுகளாற் சுற்றப்பெறும் மாலையையுடையவனாகிய அரசனது நோக்கத்தைத் தெரிந்து,
இவைகள் எல்லாம் - மேற்கூறியவை களையெல்லாம், அங்கு அவன் மொழிந்தபின்னை -
அவ்விடத்திலே சுதசாகரன் சொல்லி முடித்தபிறகு, அவனையும் அமைதிகூறி - அவனையும்
உரையடங்கியிருக்குமாறு கூறிவிட்டு, நங்கைதன் தாதை தோழர்


     (பாடம்) 1. வேலோய். 2. அலர்ந்த - அலர்த்த. 3. நால்வருள் - நால்வராவான்.