பக்கம் : 26
 

     விலங்கு யானையாகும். கூந்து-கூந்தல்; மயிர்த்தொகுதிகள் எல்லாவற்றையும்
உணர்த்தும். இச்சொல் கூந்தலென்பதன் விகாரம், கைம்மா எனவே யானையை
உணர்த்திற்று. விலங்கினுள் யாளியுங் கையுடையதாயினும் குறிஞ்சிக்குரிய யானையையே
ஈண்டு உணர்த்தி நின்றது. மேல் சுயம்வரச் சருக்கத்துள் “காந்தளங்கட் கமழ்குலையாற்
களிவண்டுகளிறகற்றும் கலிங்க நாடன்“ என்பர். மாந்துதல்-குடித்தல்; உண்ணுதல், களிமாந்தி
என இயைத்துக் கள்ளைக்குடித்து என்று உரை கூறினாரும் உளர்.

( 19 )

முல்லை

26. தார்செய் கொன்றை தளித்ததண் டேறலுண்
டேர்செய் கின்ற விளம்பு லிருங்குழைக்
கார்செய் காலை கறித்தொறு மெல்லவே
போர்செய் 1மாவினம் பூத்தண்பு றணியே.
 
     (இ - ள்.) பூ தண் புறணி - அழகிய குளிர்ந்த முல்லை நிலங்களில்; தார்
செய்கொன்றை தளித்த தண்தேறல் உண்டு-மாலைபோல் மலரும் கொன்றையிடத்தே
துளித்த குளிர்ந்த தேனையுண்டு; ஏர்செய்கின்ற இளம்புல்-அழகு செய்கின்ற இளமையான
பசும் புற்களையும்; இரும்குழை-சிறந்த தழைகளையும்; கார்செய் காலை-கார்காலத்திலே;
கறித்தொறும்-மேயுந்தோறும்; ஆஇனம்-பசுத்திரள்; மெல்லவே போர்
செய்ம்-ஒன்றோடொன்று விளையாட்டாகப் போர் செய்யும். (எ - று.)

     கொன்றைமலர் நீண்ட கொத்தாக மாலைபோல் மலருந்தன்மையுடையது ஆதலின்
தார்செய் கொன்றை என்றார். கார்செய் காலை; காரை (மழை) உண்டாகச் செய்யும்
கார்காலம். “காரு மாலையுமுல்லை“ என்பது தொல்காப்பியம், இதனால் முல்லை
நிலத்திற்குரிய கார்காலம் கூறினார். செய்ம்-செய்யும் என்னும் முற்றின் ஈற்றுயிர்
மெய்கெட்டது. மெல்லவே போர் செய்யும் என்பதனால் போர் விளையாட்டுப் போர்
என்பது பெறப்பட்டது. மாவினம்-விலங்கினம் எனவும் கூறலாம்.

( 20 )

மருதம்

27. அள்ளி லைக்குவ ளைத்தடம் மேய்ந்தசைஇக்
கள்ள லைத்தக வுட்கரு மேதிபால்

     (பாடம்) 1. மாவின.