பக்கம் : 264
 

போன்ற நீண்ட கண்ணையும் சிவந்த வாயையுமுடைய பிரீதிமதி என்பவள், பயந்த காளை -
பெற்ற மகன், வெம்களி யானை வல்ல விசயபத்திரன் என்பான் - கொடிய
களிப்புப்பொருந்திய யானையைப் போலும் ஆற்றலுடைய விசயபத்திரன் என்னும்
பெயரையுடையவன் (எ - று.)

( 115 )

இதுவுமது

354. மந்திரத் தரசர் 1கோவே மற்றவன் வையங் காக்கும்
தந்திரத் துறந்து நோற்று மறைந்தசர சார மென்னும்
இந்திர வுலக மெய்தி யேழொடீ ரைந்து முந்நீர்
அந்தர காலத் தேவர்க் கரசனா யாண்டு வந்தான்.
 

     (இ - ள்.) மந்திரத்து அரசர் கோவே! - விச்சாதரருலகத்து மன்னர் மன்னனே!,
அவன் வையங்காக்கும் தந்திரம் துறந்து - அந்த விசயபத்திரன் உலகத்தைக் காக்குஞ்
செய்கையை நீங்கி, நோற்று - தவஞ்செய்து, சரசாரம் என்னும் இந்திர உலகம் எய்தி -
சாசரம் என்னும் பெயரையுடைய இந்திர உலகத்தையடைந்து, ஏழொடு ஈர் ஐந்துமுந்நீர்
அந்தர காலம் - பதினேழு கடற்றொகை ஆண்டு அளவு, தேவர்க்கு அரசனாய்
ஆண்டுவந்தான் - விண்ணவர்கட்கு அரசனாக அரசாட்சி செய்திருந்தான் (எ - று.)

மந்திரத்தரசர் கோவே என்றது யசோதரமுனிவர் கூற்று; சுரேந்திர காந்தத்து அரசனை
விளித்தது. சாசாரம் - கற்பலோகம் பதினாறனுள் ஒன்று. இது சகஸ்ராரம் என்பதின் திரிபு.

( 116 )

இதுவுமது

355. ஆதலா லமர போக நுகர்ந்தவ னரைசர் செல்வம்
போதுலா மலங்கன் மார்ப பொருளென மருளல் செல்லான்
தீதெலா மகல நோற்றுச் சிவகதி சேரு மென்றக்
கோதிலா முனிவன் சொன்ன வுரையிவை கூறக் கேட்டாம்.
 

     (இ - ள்.) போதுஉலாம் அலங்கல் மார்ப - மலர்கள் விளங்கும் மாலைபொருந்திய
மார்பையுடையவனே!, ஆதலால் - ஆகையால், அமரபோகம் நுகர்ந்தவன் - தேவர்
இன்பத்தை உண்டு மகிழ்ந்தவன், அரைசர் செல்வம் - அரசாட்சிச் செல்வத்தை,
பொருள்என மருளல்


   (பாடம்) 1. கோவே.