செல்லான் - ஒரு பொருளாக நினைத்து மனந்திரியமாட்டான், தீது எலாம் அகல நோற்று - தீவினைகளெல்லாம் நீங்குமாறு தவஞ்செய்து, சிவகதி சேரும் என்று - இறைவன் நிலைமையை அடைவான் என்று, அக்கோதிலா முனிவன் சொன்ன உரை இவை - அந்தக் குற்றமற்ற அசோதர முனிவன் சுரேந்திரகாந்த மன்னனுக்குக் கூறிய இந்த மொழிகளை, கூறக்கேட்டாம் - நாமும் பிறர்சொல்ல அறிந்திருக்கின்றோம், (எ - று.) தேவ போகத்தை நுகர்ந்தவன் அதற்குக் கீழ்ப்பட்டதாய மனித போகத்தை விரும்பான். தேவபோகத்திற்கு மேற்பட்டதாய சிவகதியையே சேர்வான் என்று அம்முனிவன் சுரேந்திரகாந்த மன்னனுக்குச் சொன்ன உரையினை யாமும் அறிந்தோம் கூறக்கேட்டுள்ளேம் என்று சுமந்திரி கூறினான் என்க. |
(இ - ள்.) வேந்தே - அரசனே!, அம்மையால் தவங்கள் தாங்கி - முற்பிறப்பின் நல்வினையால் தவங்களைச் செய்து, அலர்ந்த நல்லறிவி னாலும் - விரிந்துள்ள மெய்யறிவினாலும் இமமையால் உடம்பு நீங்கி - இப்பிறப்பின்கண் உடலானது நீங்கப்பெற்று, இகந்துபோம் இயற்கையாலும் - விலகிப் போகின்ற இயல்பினாலும், செம்மையால் - சிறப்பினால், கடவுள் தானம் சேர்வதே சிந்தையாற்கு - கடவுளின் நிலையை அடைதலே எண்ணமாகவுடையவனுக்கு, மெய்ம்மையால் - உண்மையாக, கருமச் சுற்றம் வேண்டுவது இல்லை - வினைசெயற்குத் துணையாவராகிய மனைவி மக்கள் முதலாயினோர் வேண்டியவராகார் (எ - று.) வீடுபேற்றில் விருப்புள்ளவர்கள் உலகச் சுற்றத்தை விரும்பார்கள் என்க. |