பக்கம் : 269 | | (இ - ள்.) இந்திரன் அனைய நீரோய் - இந்திரனையொத்த தன்மையை யுடையவனே! இனிப் பிறிது எண்ணல் வேண்டா - மேலே வேறொன்றையும் ஆராய்தல்வேண்டாம், மந்திரம் நீளுமாயின் - அமைச்சர்களோடு கலந்தெண்ணப் பெறும் சூழ்ச்சியானது நீட்டிக்குமானால், வருவன அறியல் ஆகா - குழப்பமுண்டாகி மேல்வருஞ் செயல்களை அறிதலியலாது, ஆகையால்; சந்திரன் தவழ நீண்ட - திங்கள்படியுமாறு உயர்ந்துள்ள, தமனியச்சூலம் - பொற்சூலத்தை, நெற்றி - முடியினிடத்திலே கொண்டு, அந்தரந் திவளும் ஞாயில் - வானத்தையளாவும் மதில்பொருந்திய, கோயில் புக்கு அருளுக என்றார் - அரண்மனைக்குச் சென்றருள்க என்று கூறினார்கள் (எ - று.) மேலே ஆகவேண்டியவைகளை அரசன் விரைந்து புரியவேண்டும் என்னும் நோக்கத்துடனும், மேலும் ஆராய்ச்சிக்குழு நீளின் மேலும் எவரேனும் வேறு எண்ணங்களை வெளியிட்டு முடிவை மாற்றச் செய்தல் கூடுமாதலினானும் “மந்திரநீளு மாயின் வருவன வறியலாகா“ என்றனர். | ( 123 ) | அரசன் அரண்மனையை அடைதல் | 362. | மந்திரக் கிழவர் தம்மை மனைபுக விடுத்து மன்னன் சுந்தரச் சுரும்புந் தேனுஞ் சூழ்கழ னிரையு மார்ப்ப வந்தர மகளிர் போல்வார் வரன்முறை கவரி வீச அந்தரக் 1கடைக ணீங்கி யகனக ரருளிப் புக்கான். | (இ - ள்.) மன்னன் - அரசன், மந்திரக் கிழவர் தம்மை - கலந்தெண்ணும் சூழ்ச்சிக்குத் துணையாக இருந்த அமைச்சர்களை, மனைபுக விடுத்து - அவரவர்களுடைய வீட்டுக்குச் செல்லுமாறு பணித்து, சுந்தரச் சுரும்பும் தேனும் - அழகிய ஆண் வண்டுகளும் பெண் வண்டுகளும், சூழ்கழல் நிரையும் - அடியைச் சூழக்கட்டப் பெற்றுள்ள வீரக்கழல் வரிசைகளும், ஆர்ப்ப - பேரொலி செய்ய, அந்தர மகளிர் போல்வார் - தேவமாதர்களைப் போன்றவர்கள், வரன்முறை கவரிவீச - வீசவேண்டிய முறைப்படி சாமரங்களை இரட்ட, அந்தரக் கடைகள் நீங்கி - உள்வாயில்களை யெல்லாந்தாண்டி, அகல்நகர் அருளிப் புக்கான் - அகன்ற |
| (பாடம்) 1. கடைக்கணீங்கி. | | |
|
|