பக்கம் : 270
 

இடம்பொருந்திய தனது அரண்மனையை மகிழ்ச்சியுடன் அடைந்தான் (எ-று.)

அந்தர மகளிர் - வானவர் மகளிர். அந்தரக் கடை - உள்வாயில்.

( 124 )

வேறு
நண்பகலாதல்

363. மிகுகதிர் 1விலங்கலார் வேந்தன் 2றேனுடைந்
துகுகதிர் மண்டப மொளிர வேறலும்
தொகுகதிர் சுடுவன பரப்பிச் சூழொளி
நகுகதிர் மண்டில 3நடுவ ணின்றதே.
 

     (இ - ள்.) மிகுகதிர் விலங்கலார் வேந்தன் - மிகுந்த ஒளிதங்கிய
வெள்ளிமலையையுடைய அரசன், தேன் உடைந்து உகுகதிர மண்டபம் - தன்பால் அணிந்த
மலர்மாலைகளினின்றும் தேனானது வெளிப்பட்டுச் சிந்து கின்ற ஒளிதங்கிய மண்டபம்,
ஒளிர ஏறலும் - விளங்குமாறு அடைந்த அளவில், சுடுவன தொகுகதிர் பரப்பி - எதிர்பட்ட
பொருள்களைச் சுடுவன வாய்க்கூடிய ஒளிகளைப் பரப்பி, சூழ்ஒளி நகுகதிர் - சுற்றிலும்
ஒளியானது விளங்குகின்ற கதிரவனாகிய ஞாயிறு, நடுவண் நின்றது - வானத்தின்
நடுவிடத்தைப் பொருந்தியது. (எ - று.)
அரசன் தனது இருப்பிடத்தை அடைந்தபோது நண்பகலாயிற்றென்க.

( 125 )

364. கண்டிரள் கழைவளர் கரும்பு கைமிகுத்
தொண்டிரள் வெள்ளிலை யுரிஞ்சு மோடைமா
வெண்டிரண் மணிபுடை சிலம்ப விட்டன
வண்டிரள் கிளையொடு வளைக ளார்த்தவே.
 

     (இ - ள்.) கண் - கணுக்களோடே, திரள் கழைவளர் - திரண்டு கோலாக வளரா
நின்ற, கரும்பு - கரும்புகள், கை மிகுத்து - பக்கங்களிலே மிக்கிருத்தலானே, ஒண்திரள்
வெள் இலை உரிஞ்சும் - அவற்றின் ஒள்ளிய திரளாகிய வெள்ளிய ஓலைகளிலே தம்
உடற்றினவு தீர உராய்கின்ற, ஓடைமா


  (பாடம்) 1. விலங்கலான். 2. தேனுடைத் துகிர்கதிர். 3. நடுவு நின்றதே.