பக்கம் : 271
 

- முகபடாமணிந்த யானைகளை, வெண் திரள் மணி - வெள்ளிதாய்த் திரண்ட அவற்றின்
மணிகள், புடை சிலம்ப - பக்கங்களிலே ஒலிக்கும்படி, விட்டன - அக்கருப்பங்
காடுகளினூடே விடப்பட்டன; வளைகள் வண்திரள் கிளையொடு ஆர்த்த - அவ்வுச்சிப்
போதினை உணர்த்தற் பொருட்டு ஊதா நின்ற சங்குகள் வளவிய திரண்ட தம்மினத்தோடே
ஆரவாரித்தன (எ - று.)

உச்சிப்போதாகலின் யானைகள் கருப்பஞ் சோலையில் விடப்பட்டன. அக்காலத்தில்
முழங்கும் சங்கினங்கள் முழங்கின என்க. இலை - ஈண்டு புல்லிற்கு வந்தது.

( 126 )

365. ஒலிவிழா வண்டின மூத வூறுதேன்
மலிவிழாப் பிணையலு மணங்கொள் சாந்தமும்
பலிவிழாப் பதாகையும் பரந்து பாடுவார்
கலிவிழாக் கழுமின கடவுட் டானமே.
 

     (இ - ள்.) கடவுட் டானம் - கடவுள் உறையும் கோயில்களிடத்தே, ஒலி விழா
வண்டினம் - ஓசை குறையாத வண்டுக் கூட்டம், ஊதா - இசையா நிற்ப, ஊறு தேன் மலி -
ஊறுகின்ற தேன் மிக்க, விழாப் பிணையலும் - திருவிழாவிற்குரிய மலர் மாலைகளும்,
மணங்கொள் சாந்தமும் - நறுமணமுடைய சந்தனமும், பலி - பூசைபெறுகின்ற, விழா
பதாகையும் - இறக்காத கொடிகளும், பரந்து - பரவி, பாடுவார் - இறைவனை ஏத்திப்
பாடுகின்ற அடியார்களின், கலி - ஆரவாரத்தையுடைய, விழா - திருவிழாக்கள், கழுமின -
மிக்கன (எ - று.)

கடவுட் டானத்தே வண்டுபாடும் மலர்மாலைகளும் நறுமணச் சந்தனமும் கொடியும் பரவி
அடியார் ஏத்தொலிமிக்க விழாக்கள் மிக்கன என்க. ஒலி விழா - விழா வொலி என மாறுக.
விழாப் பதாகை - இறக்காத கொடி என்க. விழாவிற்குரிய பதாகையுமாம்.

( 127 )

366. குண்டுநீர்க் குழுமலர்க் குவளைப் பட்டமும்
மண்டுநீர் மரகத மணிக்கல் வாவியும்
கொண்டுநீ ரிளையவர் குடையக் கொங்கொடு
வண்டுநீர்த் திவலையின் மயங்கி வீழ்ந்தவே.