பக்கம் : 275 | | உருவம் அமையச் செதுக்கப்பட்ட இருக்கைகளாகிய பிறவற்றினும், அருமணிக்கொம்பு அனார் - காண்டற்கரிய மணிப்பூங்கொம்பு போன்ற மகளிர், பருமணிப் பளிங்கு என - பரிய மணியாகிய படிகம்போன்று, விளங்கு வான் பலி - திகழாநின்ற சிறந்த சந்தனக் குழம்பினை, அலர - விளங்கும்படி, ஊட்டினார் - பூசினார் (எ - று.) கொம்பனார், பீடமும் செதுக்கமும் அலரப் பலியூட்டினர் என்க. செதுக்கம் - செதுக்கிச்செய்த தவிசு. பலி - சந்தனக்குழம்பு. | ( 133 ) | பொழுதுணர்மாக்கள் நாழிகை கூறுதல் | 372. | அன்னணம் பொழுதுகண் 1ணகற்ற வாயிடைப் பன்னருங் காலநூல் பயின்ற பண்புடைக் 2கன்னலங் கருவியோர் கழிந்த நாழிகை மன்னவ னடிமுத லுணர்த்தி வாழ்த்தினார். | (இ - ள்.) அன்னணம் - அவ்வாறு, பொழுது கண்ணகற்ற - காலமானது கடந்துகொண்டிருக்க, ஆயிடை - அவ்வேளையில், பன்அரும் - கூறுதற்கு அருமையான, காலநூல் பயின்ற - பொழுதளவை நூலினைக் கற்றுணர்ந்த, பண்பு உடைக்கன்னலங் கருவியோர் - பான்மையமைந்த நாழிகை வட்டிலையுடையவர்கள், கழிந்த நாழிகை - அதுவரையிற் சென்றுள்ளபொழுதை, மன்னவன் - அரசனின், அடிமுதல் உணர்த்தி - முன்னாலே தெரியப்படுத்தி. வாழ்த்தினார் - வாழ்த்துரைகள் கூறினார்கள். (எ - று.) | ( 134 ) | மன்னன் உண்ணுதல் | 373. | வாரணி முலையவர் பரவ மன்னவன் ஈரணிப் பள்ளிபுக் கருளி னானிரந் தேரணி யின்னிய மிசைத்த வின்பமோ டாரணி தெரியலா னமிர்த மேயினான். | (இ - ள்.) வாரணி - கச்சணிந்த, முலையவர் - முலையினையுடைய மகளிர்கள், பரவ - வாழ்த்தாநிற்ப, மன்னவன் - அரசன், ஈர் அணி பள்ளி - குளிர்ச்சியின் பொருட்டு ஆவன அமைக்கப்பட்ட மாடத்தில், |
| (பாடம்) 1. அற்ற. 2. கண்ணறும், கண்ணலம். | | |
|
|