பக்கம் : 278
 

அரசன் யாண்டுச் செல்லினும் காவல் இன்றியமையாததாகலின், நிமித்திகன் மனைக்குச்
செல்லும்போதும் பாதுகாத்துச் செல்லுகின்றனர் என்க.

( 138 )

அரசன் நிமித்திகன் வாயிலையடைதல்

377. சுரும்புசூழ் பிணையலுஞ் சுண்ண மாரியும்
கரும்புசூழ் 1கிளவியர் சொரிந்து கைதொழ
நிரம்புநூ னிமித்திகன் மாட நீள்கடை
அரும்புசூழ் தெரியலா னருளி னெய்தினான்.
 

     (இ - ள்.) அரும்புசூழ் தெரியலான் - அரும்புகளைச் சூழவமைத்துக் கட்டப்பெற்ற
மாலையையணிந்த அரசன், கரும்புசூழ் கிளவியர் - கரும்பினது இனிமையானது
அமையப்பெற்ற சொற்களையுடைய மங்கையர், சுரும்புசூழ் பிணையலும் - வண்டுகள்
மொய்க்கப்பெற்ற மாலையையும், சுண்ணமாரியும் - நறுமணப் பொடிகளின் மழையையும்,
சொரிந்து கைதொழ - மிகுதியாகப் பெய்து கையெடுத்து வணங்க, நிரம்பு நூல் நிமித்திகன்
- சோதிட நூற்புலமை நிறைந்த சதுவிந்துவினுடைய, மாட நீள்கடை - வீட்டின் நீண்ட
வாசலை, அருளின் எய்தினான் - அன்போடு அடைந்தான் (எ - று.)

( 139 )

நிமித்திகன் அரசனை வரவேற்றல்

378. எங்குலம் விளங்கவிங் கருளி வந்தவெங்
கொங்கலர் தெரியலாய் கொற்றங் கொள்கென
மங்கல வுழைக்கலம் பரப்ப மன்னனுக்
கங்கலர் கேள்வியா னாசி கூறினான்.
 

     (இ - ள்.) மங்கல உழைக்கலம் பரப்ப - நிமித்திகனது இல்லத்து வாயிலையடைந்த
அரசன் தன்னுடன் கொண்டு சென்ற மங்கலப் பொருள்களைப் பரப்பிவைக்க, அங்கு -
அப்போது, அலர்கேள்வியான் - விரிந்த கேள்வியறிவையுடைய சதவிந்து, எங்குலம்
விளங்க - எம்முடைய குலமானது மேன்மையையடைய, இங்கு - இவ்விடத்திற்கு, அருளிவந்த -


(பாடம்) 1. கிளவியார்.