பக்கம் : 286
 

உலகில் உள்ளன

390. 1குலகிரி யாறுகூர் கண்ட மேழ்குலாய்
2மலைதிரை வளர்புன லேழி ரண்டதாய்க்
கொலைதரு வேலினாய் கூறப் பட்டதிவ்
வலைதிரை நெடுங்கட லவனி வட்டமே.
 

     (இ - ள்.) கொலைதருவேலினாய் - கொலையைச் செய்கின்ற வேற்படையை
யுடையவனே, இவ் அலைதிரை நெடுங்கடல் அவனிவட்டம் - அலைகின்ற திரைகள்
பொருந்திய நீண்ட கடலாலே சூழப்பெற்ற இந்த உலகமானது, இரண்டதாய் - இரண்டு
கூறுடையதாய், குலகிரி ஆறு கூர்கண்டம் ஏழ் குலாய் - மேன்மையமைந்த ஏழு
மலைகளையும் ஏழு ஆறுகளையும், பொருந்திய ஏழு கண்டங்களையும் உடையதாய் மேலும்,
மலைதிரை வளர்புனல் ஏழ் - கரையை மோதுகின்ற அலைகள் பொருந்திய ஏழு
கடல்களையும் உடையதாய், கூறப்பட்டது-சொல்லப்பட்டிருக்கிறது (எ-று.)

இவ்வவனி வட்டம் இரண்டு கூறுடையதாய் ஏழுகிரிகளையும் ஏழு பேரியாறுகளையும் ஏழு
கண்டங்களையும் ஏழு கடல்களையும் உடையதாய்க் கூறப்பட்டது என்க.

( 152 )

389. மாற்றறு மண்டில மதனு ளூழியால்
ஏற்றிழி புடையன விரண்டு கண்டமாம்
தேற்றிய விரண்டினுந் தென்மு கத்தது
பாற்றரும் புகழினாய் பரத கண்டமே.
 

     (இ - ள்.) மாற்று அறு - ஒப்பற்ற, மண்டிலம் அதனுள் - இம்மண்ணுலகத்தே,
ஊழியால் - முறைமையாலே, ஏற்றிழிபு - உயர்வுதாழ்வுகள், உடையன - தம்முள் உடையன,
இரண்டு கண்டமாம் - இரண்டு கண்டங்கள் உளவாம், தேற்றிய - அவ்வாறு உளவாகக்
கூறப்பட்ட, இரண்டினும் - அவ்விரண்டனுள், தென்முகத்தது - தென்றிசைக்கண் உள்ள
கண்டம், பாற்று அரும் புகழினாய் - தவிர்த்த லரிய புகழையுடையோனே, பரதகண்டமே -
பரதகண்டம் எனப்படும் (எ - று.)


 (பாடம்) 1. குலகிரியாறினுங் கண்ட மேழினும். 2. மலைதிரை தண்புனலேழிரண்டினும். இப்பாட்டுச் சில ஏட்டுப் பிரதிகளில் இல்லை.