சுயம்பிரபை மணச்செய்தியை அரசன் சொல்ல அமைச்சர் பதில் கூறத்தொடங்குதல் |
425. | தாங்கிய முலையவ 1டிருவும் வெம்முலைக் கோங்கிய முகிலவ னுரிய பெற்றியுந் தாங்கிய புகழவன் மொழியத் தாரவர் 2தேங்கிய வுவகையர் தெரிந்து சொல்லினார். |
(இ - ள்.) தாங்கிய புகழவன் - புகழைத் தாங்கிய அரசன், வீங்கிய முலையவள் திருவும் - பெருத்த கொங்கைகளையுடைய சுயம்பிரபையின் சிறப்பையும், வெம்முலைக்கு ஓங்கிய முகிலவன் உரிய பெற்றியும் - விருப்பத்தை யுண்டாக்குகின்ற சுயம்பிரபையின் கொங்கைகளைத் தழுவுதற்குப் பிறந்து சிறந்துள்ள முகில் வண்ணனாகிய திவிட்டனது பெருமையையும்; மொழிய - கூற, தாரவர் - மாலைகளையணிந்தவர்களாகிய அமைச்சர்கள், தேங்கிய உவகையர் - மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தவர்களாய், தெரிந்து சொல்லினார் - மேலே நடைபெற வேண்டிய செயல்களையுணர்ந்து சொல்லலானார்கள், (எ - று.) |
பயாபதி யரசனிடம் தூது அனுப்புவோம் என்றல் |
426. | தெய்வமே 3திரிகுழற் சிறுமி யாவதற் கையமே யொழித்தன மனலும் வேலினாய் 4செய்யதோர் தூதினித் திவிட்டன் றாதையாம் வெய்யவே லவனுழை விடுத்தும் வேந்தனே. |
(இ - ள்.) அனலும் வேலினாய் - ஒளி வீசுகின்ற வேற்படையை உடையவனே!, திரிகுழல் சிறுமி தெய்வமே ஆவதற்கு - முறுக்குண்ட கூந்தலையுடைய சுயம்பிரபையானவள் தெய்வமே ஆகி விளங்குதற்கு, ஐயமே ஒழிந்தனம் - ஐயப்பாடு சிறிதும் இல்லாமல் நாங்கள் உணர்ந்து கொண்டோம், இனி - இனிமேல், திவிட்டன் தாதையாம் வெய்ய வேலவன் உழை - திவிட்டனுடைய தந்தையாகவும் கொடிய வேற்படையை உடையவனாகவும் விளங்கும் பயாபதி மன்னன் இடத்திற்கு, வேந்தனே - அரசனே, ஓர் தூது விடுத்தும் - ஒரு தூதுவனை யனுப்புவோம் (எ - று.) |
|
(பாடம்) 1. திருவும் அம்முலைக். 2. வீங்கிய உவகையர் வியந்து சொல்லினார். 3. சுரிகுழல். 4. செய்வதேலிதுவினி. |