பக்கம் : 314
 

இலவம் - புன்னையுடனே இலவ மரங்கள்; புடை அவிழ்வன - புதுமலர் களையுடையன;
பக்கங்களிலே மலர்வனவாகிய புதிய மலர்களையுடையன; கமழ்பாதிரி - மலரால்
நறுமணத்தை வெளிப்படுத்தும் பாதிரிமரங்கள், கடிஅவிழ்வன - மணத்தை
வெளிப்படுத்துவன; சாகம் - தேக்கு மரங்கள்; கலிகளிகைய - செழிப்பான மலர்
மொட்டுக்களை யுடையன; இடை - இம்மரங்களுக்கிடையே; அவிழ்வன - பல செடி
கொடிகளிலிருந்து மலர் வனவான; மலர்அளவுஇல - பூக்கள் கணக்கற்றனவாம்; இது
பொழிலினது இயல்பு - இஃது அந்த புட்பகரண்டமென்னும் பூங்காவினது தன்மை யாகும் (எ - று.)

இச் செய்யுளில் கோங்கு முதலிய சில மரங்களைக் கொண்டிருப்பதைக் கூறிப் பொழிலின
இயல்பை ஒருவாறு முடிக்கின்றார். கோங்கின்முகை கொங்கையை ஒத்திருக்க அது மலர்ந்த
நிலையில் தட்டுப்போல விளங்குமாதலின் கோங்கு மலர்ந்தவற்றை கோங்கம்
குடையவிழ்வன கொழுமலரின என்றார்.

( 5 )

பொழிலில்வாழும் வண்டு புள் முதலியவைகளின் சிறப்பு

436. மதுமகிழ்வன மலர்குடைவன மணிவண்டொடு தும்பி
குதிமதிழ்வன 1குவிகுடையன நுதிகோதுபு குயில்கள்
புதுமகிழ்வன பொழிலிடையன புணர்துணையன பூவை
விதிமகிழ்பவர் மதிமகிழ்வுற விரவுற்றன விரிவே.
 

     (இ - ள்.) மணிவண்டொடுதும்பி - அழகிய வண்டுகளுடனே தும்பிகள்; மதுமகிழ்வன
- தேனையுண்ண மகிழ்ச்சி கொண்டனவாகி; மலர்குடைவன - பூக்களைக் கிண்டுவன;
குயில்கள் - குயில்கள் என்னும் பறவைகள்; நுதிகோதுபு - மலர்தளிர் முதலியவற்றின்
நுனிகளை வாயலகினாலே கோதி; குதிமகிழ்வன - குதித்து மகிழ்வன பிறகு, குவிகுடையன
- அடங்கியமைந்து அவைகளைக் குடைவன; பூவை - நாகணவாய்ப் பறவையின் ஆண்கள்;
புணர்துணையன - தம்முடைய பெட்டைகளோடு சேர்ந்தனவாய்; புதுமகிழ்வன - புதுமணக்
களிப்பை யடைவன; பொழில் இடையன - அப்பொழிலினிடையே தங்குவன; இவ்வாறான;
விரிவு - அச்சோலையின் பரப்பு, விதி மகிழ்பவர் -


(பாடம்) 1. குளிர்குடையன நுதுகோதுவ.