பக்கம் : 326
 
451. 1அலத்தக மலைத்தன வடித்தல மரற்றும்
கலைத்தலை மலைத்து 2விரி கின்றகடி யல்குல்
முலைத்தலை முகிழ்த்தொளி துளும்பி3யுள முத்தம்
மலைத்தலை மயிற்கண மருட்டுமவர் சாயல்.
 

      (இ - ள்.) அவர் - அம்மகளிருடைய, அடித்தலம் - அடிகள்; அலத்தகம் -
செம்பஞ்சுக் குழம்பினை, மலைத்தன - தம்மியற்கை நிறத்தாலே வென்றன, கடி அல்குல் -
அம்மகளிரின் காவலமைந்த அல்குற்றடம், அரற்றும் - ஆரவாரிக்கின்ற, கலைத்தலை
மலைத்து - மேகலையிடத்தை வருத்தி, விரிகின்ற - விரியாநின்றன, முலைத்தலை -
அம்மகளிரின் முலையிடத்தே, முகிழ்த்து - தோன்றிய, ஒளி - இயற்கையொளியாலே,
முத்தம் - முத்து மாலைகள், துளும்பியுள - சுடர்மிக்குத் திகழ்ந்தன, சாயல் - அம்
மகளிரின் சாயலோவெனில், மலைத்தலை - மலையிடத்தே வாழும், மயிற்கணம் - மயிலின்
கூட்டத்தை, மருட்டும் - ஒக்கும், (எ - று.)

முகிழ்த்த என்றது ஈறுகெட்டு முகிழ்த்தொளி எனப்புணர்ந்தது. மயிற்கணம் மருட்டும் -
மயிற்கணமோ எனக் காண்போரை மருட்டும் என்க.

( 21 )

வண்டுகள் ஒலித்தல்

452. கணங்கெழு 4கலாவமொளி காலுமக லல்குல்
சுணங்கெழு 5தடத்துணை முலைச்சுமை யிடத்தாய்
வணங்கியும் நுணங்கியும் 6வருந்திய மருங்கிற்
கிணங்குதுணை 7யாய்ஞிமி றிரங்கின வெழுந்தே.
 

     (இ - ள்.) கணங்கெழு கலாவம் ஒளிகாலும் - கூட்டமாகப் பொருந்திய
மணிக்கோவையானது ஒளியைச் செய்யும், அகல் அல்குல் இடத்தாய் - அகன்ற அல்குலுக்கு
மேலிடத்ததாகிய, சுணங்குஎழு - தேமல்பொருந்திய, தடத்துணை முலைச்சுமை - பெருத்த
இரண்டாகிய கொங்கைச் சுமையினால், வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற்கு -
வளைந்தும் அசைந்தும் வருத்தத்தை யடைந்த இடைக்கு, இணங்கு துணையாய் -
பொருந்திய துணையாகி, ஞிமிறு எழுந்து இரங்கின - வண்டுக் கூட்டங்கள் எழுந்து
இரங்கினாற்போல ஒலித்தலைச் செய்தன, (எ - று.)


(பாடம்) 1. அலைத்தகை. 2. விரிகின்றவகலல்குல். 3. யிள. 4. கலாவம் கலந்தவக. 5. தடத்தொடு. 6. வருந்தியும். 7. ஆய்வண்டிரங்கின.