பக்கம் : 330 | | மைந்தர்கள் கலங்கி மெலிதல் | 458. | நெய்யலர் குழற்றொகை நெருப்பினடு மென்பார் மையலர் நெடுங்கணிவை வல்லகொலை யென்பார் தொய்யிலிள மென்முலையி னீர்சுடுதி ராயின் உய்யல மெனத்தொழுது மைந்தர்க ளுடைந்தார். | (இ - ள்.) மைந்தர்கள் - ஆடவர்கள், நெய அலர் குழல் தொகை - நெய்யணிதலாலே மிகச் சிறந்து விளங்குகிற கூந்தல் தொகுதியானது, நெருப்பின் அடும் என்பார் - தீயைப்போலச் சுடுகின்றது என்றுகூறுவார்கள், மைஅலர் நெடுங்கண் இவை - மையணிதலாலே மலர்ந்துள்ள நீண்ட கண்களாகிய இவை கொலைவல்ல என்பார் - ஆடவர்களைக் கொலைபுரிதலிலே சிறந்தவைகள் என்று கூறுவார்கள், தொய்யில் இள மென் முலையில் - தொய்யில் எழுதப்பெற்றவையும் இளமையையுடையவையுமாகிய மெல்லிய கொங்கைகளால், நீர் சுடுதிராயின் - நீவிர் எங்களைச் சுட்டு வருத்துவீர்களானால், உய்யலம் எனத்தொழுது உடைந்தார் - நாங்கள் உயிர்வாழமாட்டோம் என்றுகூறி வணங்கி வருந்தினார்கள், (எ - று.) | ( 28 ) | வேறு | 459. | நாம நூற்கலை விச்சை யினன்னெறி யிவைதாம் தாம நீள்குழற் றளர்நடை யுருவுகொண் டனையார் வாம மேகலை மடவர லிவர்களை வளர்த்தார் காம நூலினுக் கிலக்கியங் காட்டிய 1வளர்த்தார். | (இ - ள்.) நாம நூல் கலை - இன்ப நூல் என்னும் பெயரையுடைய நூலாகிய கலையிடத்தே கூறப்பட்ட, விச்சையின் நன்னெறி - வித்தைகளின் நல்லவழியாகிய, இவைதாம் - இவைகளே, தாமம்நீள்குழல் - மலர்மாலை யணிந்த நீண்ட கூந்தலோடே, தளர் நடையுருவு - தளர்ந்த நடையினை யுடைய மகளிர் வடிவத்தை, கொண்டனையார் - கொண்டாற்போன்றவராகிய, வாமமேகலை - அழகிய மேகலை அணிகலன் அணிந்த, மடவரலிவர்களை |
| (பாடம்) 1. வளத்தார். | | |
|
|