பக்கம் : 332
 
  குலவு வார்1சிலை மதனனைங் 2கணையொடு குலவி
இலவு வாயுடை யிளையவ ருடையன விவையே.
 

      (இ - ள்.) புலவிதானும் - இவர் ஊடுதலும், ஓர் - ஒப்பற்ற, கலவியை -
புணர்ச்சியை, விளைப்பதோர் - தோற்றுவித்தற்குரிய. புலவி - ஊடலேயாகும்,
அவ்வூடலகன்று, கலவிதானும் - இவர் கூடும் புணர்ச்சியும், ஓர் - பின்னரும், ஒரு
புலவியை - ஊடலை, விளைப்பதோர் புலவி - தோற்றுவிப்பதாகிய புலவியேயாம்,
குலவுவார்சிலை - வளைகின்ற நெடிய வில்லையுடைய, மதனன் - காமவேளின்,
ஐங்கணையொடு குலவி - ஐந்து கணைகளோடும் பொருந்தி, இலவு வாயுடை இளையவர் -
இலவ மலர்போன்ற சிவந்த வாயினையுடைய இளையராகிய இம் மகளிர், உடையன -
உடையவாயிருக்கின்ற செயல்கள், இவையே - இப்புலவியும் கலவியுமேயாம், (எ - று.)

புலவி கலவிக்கும் கலவி புலவிக்கும் காரணமாயின என்றவாறு, ஊடுதல் காமத்துக் கின்பம்
புணர்தல் ஊடுற்கின்பமாகலின் இவ்வாறு கூறினார். இதனை, துனியும் புலவியும் இல்லாயிற்
காமம் கனியும் கருக்காயுமற்று என்பதனானும் உணர்க.

( 31 )

462. மன்னு வார்சிலை மதனனோர் வடிவுகொண் 3டிலாதான்
தன்னை நாமுமோர் தகைமையிற் றணத்துமென் றிருப்பார்
என்னை பாவ4மிங் கிவர்களைப் படைத்தன னிதுவால்
பின்னை யாங்கவன் பிறவிக்கு முதல்கண்ட வகையே.
 

     (இ - ள்.) மன்னுவார் - தவத்தின்கண் நிலைபெறுவோர், சிலைமதனன் ஓர் வடிவு
கொண்டிலாதான் - கரும்பு வில்லையுடைய காமன் தனக்கென ஒரு உருவம் இல்லாதவன்,
தன்னை - அத்தகையனை, யாமும் ஓர் தகைமையின் தணத்தும் - யாமும் ஒப்பற்ற
நம்முடைய தகுதியாலே வென்று அவன் ஆட்சியினின்று பிரிந்துபோவேம், என்று
இருப்பார் - என்று துணிந்து அந்நிலையிலே தங்கியிருப்பார் மன்! ஆங்கு அவன் -
படைப்புக் கடவுளாகிய பிரமன் அவர் கருத்து நிறைவுறாதபடி, இங்கு இவர்களைப்
படைத்தான் - இவ்வுலகத்தே இம்மகளிரை இத்தகைய அழகுடையோராய்ப் படைத்தனன்;
ஆங்கு அவன் பின்னைப் பிறவிக்கு முதல்கண்டவகை இது -


(பாடம்) 1. தினை. 2. கணையொடு முடனே. 3. டிவர்தான். 4. மீங்கிவர்களை.