(இ - ள்.) வாமம் மேகலை முதல் நின்று - இம்மகளிருடைய அழகிய மேகலை அணியின் அடிப்பகுதியிலிருந்து, வயிற்றிடை - வயிற்றின் நடுவிடத்தே, வளர்ந்த - வளர்ந்துள்ள, சாமம் - கரிய, லேகைகள் - கோடுகள், மயிர்நிரை அல - மயிர் ஒழுங்கல்ல, தலமீது - அல்குற்றடத்தின்மீது, காம நீர் எரி - காம நீர்மையுடையதொரு நெருப்பு, அகத்தது - உள்ளிடத்தே அமைந்தது, கனன்றெழ - பற்றிஎழாநிற்ப, நிமிர்ந்த - அந் நெருப்பின்கண்ணிருந்து உயர்ந்தெழுந்த, தூம லேகைகள் - புகையினாலாய கோடுகள், பொடித்தன - முளைத்தன, துணை முலையுற - இரண்டாகிய முலையினை அடைதற்பொருட்டு, (எ - று.) இம்மகளிரின் வயிற்றிற் றோன்றும் கரியகோடு இவர் அல்குலகத்தே யிருந்து கனலும் காமத்தீயின் புகை முலையினை எய்தச் செல்லுதலால் ஆகிய புகைக்கோடு என்பதை அறியார், மயிர்க்கோடு என்பர் என்பதாம். |
(இ - ள்.) சில சனங்கள் தாம் தவங்களைத் தாங்குதும் - மக்களிற் சிலபேர் தாங்கள் தவங்களைச் செய்கின்றோம், எனப் போய் - எனச் சென்று, வனங்கள் காப்பவர் உளர்என - காட்டைக் காவல் புரிபவர்களாக இருக்கிறார்கள் என்று, தனங்கள்தாம் - இந்த மங்கையரின் கொங்கைகள், |