பக்கம் : 336 | | வைத்திருந்தது, ஆடை - உடையாகும், ஒருத்தி - மற்றொருத்தி, தன் மாடுகைத் தலத்துக்கொண்டது - தன்னிடத்திலே கையில் வைத்திருந்தது, அடைப்பை - வெற்றிலைப்பையாகும், சேடி - வேறொரு பணிப் பெண்ணின், கைத்தலத்தன - கையினிடத்திலேயிருந்தன, மணிக்கலம் - அழகிய அணிகலன்களாகும், மற்றொருத்தியினுடைய கையினிடத்திலே, செறிமணித் திகழ்வ செம் கோடிகைத் தலத்தன - நெருக்கமாக மணிகள் பதித்து விளங்குவதாகிய அழகிய பூவேலை செய்யப்பட்ட தட்டினிடத்திலேயிருந்தன, குளிர்மணிப் பிணையல் - குளிர்ந்த மணிகளால் இயன்ற மாலைகள், (எ - று.) இதனால் பணிப்பெண்களான நான்குமகளிரும் தம் கையிற் கொண்டிருந்த பொருள்களைத் தெரிவித்தவாறு. பூந்தட்டை யுணர்த்துவதாகிய கோடிகம் என்னுஞ்சொல் கோடிகையெனத் திரிந்து நின்றது. | ( 37 ) | மற்றும்பலர் பலபொருள்களைக்கொண்டு செல்லுதல் | 468. | வண்ணச் சந்தங்க ணிறைந்தன மணிச்செப்பு வளர்பூங் 1கண்ணிச் சந்தங்க ணிறைந்தன 2கரண்டகங் கமழ்பூஞ் சுண்ணச் சந்தங்க ணிறைந்தன சுடர்மணிப் 3பிரப்போ டெண்ணச் சந்தங்கள் படச்சுமந் திளையவ ரிசைந்தார். | (இ - ள்.) வண்ணம் சந்தங்கள் நிறைந்தன மணிச்செப்பு - நல்ல நிறம்பொருந்திய சந்தனங்கள் நிறைந்தனவாகிய அழகிய சிமிழ்களும், வளர்பூங்கண்ணி - மிகுதியான பூமாலைகளினாலாகிய, சந்தங்கள் நிறைந்தன கரண்டகம் - அழகுப்பொருள்கள் நிறைந்தனவாகிய பூங்குடலைகளும், கமழ் - நறுமணம் வீசுகின்ற, பூ சுண்ணச்சந்தங்கள் - அழகிய நறுமணப் பொடி வகைகள், நிறைந்தன - நிறைந்தனவாகிய, சுடர்மணிப்பிரப்போடு - விளங்குகின்ற மணிகள் இழைத்துச் செய்யப்பெற்ற குறுணியளவுள்ள ஏனமும் ஆகியவற்றை, எண்ண - யாவரும் மதிக்கவும், சந்தங்கள்பட - அழகுகள் பொருந்தவும், சுமந்து - ஏந்திக்கொண்டு, இளையவர் இசைந்தார் - வேறுபல பெண்களும் அங்குவந்து சேர்ந்தார்கள், (எ - று.) |
| (பாடம்) 1. கண்ண. 2. காண்டகம். 3. பிறப்போ. | | |
|
|