பக்கம் : 339
 
  சூட்டி னார்சிலர் நறுமல ரறுசுவை யடிசில்
ஊட்டி னாரவ னமரரு ளொருவனொத் தொளிர்ந்தான்.
 

      (இ - ள்.) வெறிகமழ்வன அணிகிளர் நறுநீர் - பலவகை மணங்கள் பொருந்திய
மேன்மையமைந்த நல்ல நீரில், ஆட்டினார் - மரீசி குளிக்கும்படியாகச் செய்தார்கள்,
நறுஞ்சாந்தமும் சிறிது தீட்டினார் - நல்ல சந்தனத்தையுஞ் சிறிது பூசினார்கள், சிலர் - சில
மாதர்கள், நறுமலர் மெய்கமழச் சூட்டினார் - நல்ல மணம்மிக்க மலர்களை உடலிலே
மணங்கமழும்படியாக அணிந்தார்கள். அறுசுவை அடிசில் ஊட்டினார் - ஆறுவகை
இனிமைகளும் அமைந்த உணவை உண்பித்தார்கள். அவன் அமரருள் ஒருவன் ஒத்து
ஒளிர்ந்தான் - வழிபாடுகளையெல்லாம் பெற்ற அம் மரீசியானவன் தேவர்களுள்
ஒருவனைப் போன்று திகழ்ந்தான். (எ - று.)

பணிப்பெண்கள் மருசிக்குச் செய்யவேண்டியவைகளை யெல்லாஞ் செய்தனர். அதனால்
மருசி விண்ணகத்துத் தேவர்களில் ஒருவனைப் போன்று சிறந்து விளங்கினான்.

( 41 )

மாதர்களின் மாட்சிமையை எண்ணி
மரீசி மகிழ்ந்திருத்தல்

472. வயந்த முன்னிய திலகைகல் லியாணிகை வடிவார்
வியந்த 1சேனைமென் கமலமா லதையென 2விளம்பும்
இயங்கு பூங்கொடி யனையவ ரியல்புக ணினையா
வயங்கு தொல்புக ழம்பர 3சரன்மகிழ்ந் திருந்தான்.
 

      (இ - ள்.) வயங்குதொல் புகழ் அம்பரசரன் - விளங்குகின்ற பழைமையான
சீர்த்தியையுடையவனும் விசும்பாறாகப் போக்கு வரவு செய்பவனுமாகிய மரீசியானவன்,
வயந்தமுன்னிய திலகை - வயந்தம் என்னும் பெயருக்கு முன்னாலே திலகை என்பது
சேரப்பெற்ற வயந்த திலகை, கல்லியாணிகை - கல்லியாணிகை, வடிவார் வியந்தசேனை -
அழகு பொருந்திய வியந்த சேனை, மென் கமலமாலதை - மென்மைத்தன்மை பொருந்திய
கமலமாலதை, எனவிளம்பும் - என்று சொல்லப்பெறும், இயங்கு பூங்கொடி அனையவர் -
அசைகின்ற பூங்கொடியைப் போன்றவர்களது,


(பாடம்) 1. சேனைபின். 2. இவர்கள். 3. சரன அமர்ந்திருந்தான்.