(இ - ள்.) தம்பியோடு சங்க வண்ணன் - தம்பியாகிய திவிட்டனுடனே விசயனானவன், அம்பொன்மாலை தாழ்முகம் - அழகிய பொன்னரிமாலையானது தொங்குகின்ற முகத்தையும், பைம்பொன்ஓடை - பசிய பொன்னாலாகிய முகபடாத்தையும், வீழ்மணி - இரண்டு புறத்துந் தாழ்ந்து தொங்குகின்ற மணிகளையும் உடைய, பகடு எருத்தம் ஏறினான் - ஆண் யானையினுடைய பிடரியின்மீது ஏறினான்; செம்பொன் மாமலைச் சிகை - செம்பொன்னைக்கொண்ட பெரிய மலையுச்சியிலே, கருங்கொண் மூவினோடு எழூஉம் - கருநிறமுடைய முகிலினோடு எழுந்து தோன்றுகின்ற, வம்பவெள் நிலா இலங்கு - புதுமையையுடைய வெள்ளிய நிலவினால் மிளிருகின்ற, திங்கள்போல் மன்னினான் - திங்களைப்போலப் பொருந்தியிருந்தான். (எ - று.) யானை மலைக்கும், முகில் திவிட்டனுக்கும், திங்கள்விசயனுக்கும் உவமை. |
(இ - ள்.) பல்லியக்குழாம் ஆர்த்த - பலவகை ஒலிக்கருவிகளின் கூட்டங்கள் முழங்கின, குஞ்சரக்குழாம் அதிர்த்த - யானைக் கூட்டங்கள் அதிர்ந்தன, வீரர் தேர்குழாம் தேர்த்த - மள்ளர்களுடைய தேர்க்கூட்டங்கள் வந்து கலந்தன, பல்சனக் குழாம் திசைத்த - பல மக்களின் கூட்டம் உடன் செல்ல இடங்கிடைக்காமல் திகைத்து நின்றன, சாமரக்குழாம் போர்த்த - |