பக்கம் : 345
 
  சாலவாயி றாமெலாமொர் தாமரைத் தடத்திடை
நீலமாம லர்க்குழாநி ரந்தலர்ந்த நீரவே.
 

      (இ - ள்.) மாலை தாழும் மாடவாய் - மாலைகள் தொங்கவிடப்பெற்ற
உப்பரிகையமைந்த வீட்டிலே, நிலத்தகத்து - மேனிலத்திலே, சாலவாயில் எலாம் -
சாரளங்களின் வாயில்கள் எல்லாம், மங்கைமார் - மாதர்களின், வேல் அவாய நெடிய கண்
- வேற்படையை யொத்த நீண்ட கண்கள், விலங்கி நின்று இலங்கலால் - விட்டு விட்டு
ஒளி செய்து விளங்குதலால், ஓர் தாமரைத்தடத்திடை - ஒரு தாமரைத்
தடாகத்தினிடத்திலே, நீலமா மலர்க்குழாம் - கருங்குவளை என்னுஞ் சிறந்த மலர்க்
கூட்டங்கள், நிரந்து அலர்ந்த நீர - வரிசையாக மலர்ந்து விளங்குந் தன்மையைப் போலக்
காணப்பட்டன. (எ - று.) தாம் : அசை.

விசயதிவிட்டர்கள் பொழிலையடைதற்குத் தெருவழியாகச் செல்லுகின்றனர். அந்நகரத்து
மாதர்கள் மேனிலத்திலேயுள்ள பல கணி வழியாக அவர்களைப் பார்க்கின்றனர்.
அப்பலகணிகள் தாமரைத் தடாகத்தினிடையே கருங்குவளை மலர்க்கூட்டங்கள்
அடுக்கடுக்காக மலர்ந்திருக்கின்றாற் போலக் காணப்பெறுகின்றன.

( 50 )

481. சுண்ணமாரி தூவுவார் 1தொடர்ந்துசேர்ந்து தோழிமார்
வண்ண 2வார வளைதயங்கு முன்கைமேல்வ ணங்குவார்
நண்ணிநா ணொழிந்துசென்று நம்பிமார்கள் 3முன்னரே
கண்ணிதம்மி னென்றிரந்து 4கொண்டுநின்று கண்ணுவார்.
 

      (இ - ள்.) சுண்ணமாரி தூவுவார் - நறுமணப் பொடிகளை மழைபோல
இறைப்பார்கள், தொடர்ந்து சேர்ந்து - பின்பற்றிச் சென்று, தோழிமார் - தோழிப்
பெண்களுடைய, வண்ண ஆரவளை தயங்கு - அழகிய முத்துக்கள் பதித்துச் செய்யப்பெற்ற
வளையல்கள் விளங்குகின்ற, முன்கைமேல் வணங்குவார் - முன்கையினிடத்திலே
பணிவார்கள், நாண் ஒழிந்துசென்று நண்ணி - நாணமானது நீங்குமாறு போய், நம்பிமார்கள்
முன்னரே - விசய திவிட்டர்களுக்கு முன்பு, கண்ணி தம்மின் - நீங்கள் அணிந்துள்ள
மாலையைத் தாருங்கள், என்று இரந்துகொண்டு நின்று


(பாடம்) 1. தொழுது சேர்ந்து. 2. வார்வளை. 3. முன்னர் நின்று. 4. கொண்டுமென்று.