பக்கம் : 346
 

கண்ணுவார் - என்று கூறிக் கேட்டுக்கொண்டு நின்று பலவாறு எண்ணுவார்கள். (எ - று.)

விசயதிவிட்டராம் இளங்காளையரைக் கண்ட நங்கையரின் செயல் இச்செய்யுளாலும்
கூறப்பெறுகிறது. மங்கைமார் மாலையை இரத்தல் இதனில் கூறப்பட்டது.

( 51 )

482. பாடுவார்மு ரன்றபண்ம றந்தொர்வாறு பாடியும்
ஆடுவார்ம றந்தணிம யங்கியர்மை யாடியும்
சூடுவான்றொ டுத்தகோதை சூழ்குழன்ம றந்துகண்
நாடுவாய்நி ழற்கணிந்து நாணுவாரு மாயினார்.
 

     (இ - ள்.) பாடுவார் - பண்பாடுகின்ற மகளிர்கள், முரன்ற பண் மறந்து - தாம்
பாடிய பண்ணமைதியை மறந்தனராய், ஓர்வாறு - ஏதோ ஒருவகையானே, பாடியும் -
பாடுவாரும், ஆடுவார் - கூத்தாடு மகளிர்கள், மறந்து - தாம் ஆடும் கூத்தியலினை
மறந்தனராய், மயங்கியர் - மயங்கியவராய், மையாடியும் - குற்றமுற ஆடுவாரும், சூடுவான்
தொடுத்த கோதை - சூடிக்கோடற் பொருட்டுத் தொடுத்த மாலைகளை, சூழ்குழல் மறந்து -
சூடவேண்டிய குழலிலே சூடுதலை மறந்தனராய், கண் நாடு வாய் - தம் கண்கள் நாடிய
விடத்தே தோன்றிய, நிழற்கு அணிந்து - நிழலிலே சூட்டத்தொடங்கி, அஃதமையாமையாலே, நாணுவாரும் ஆயினார் - நாணமடைகின்றவர்களும் ஆயினர்.

மாதர்கள் விசய திவிட்டர்களின் அழகால் மயங்கியமையின் இந் நிலையை அடைந்தனர் என்க.

( 52 )

483. இட்டவில்லி ரட்டையுமி ரண்டுகெண்டை 1போல்பவும்
விட்டிலங்கு தொண்டையங் கனிப்பிழம்பொ டுள்விராய்ச்
சுட்டிசூட்ட ணிந்துசூளி மைமணிசு டர்ந்துநீள்
பட்டம்வேய்ந்த வட்டமல்ல தில்லைநல்ல பாங்கெலாம்.
 

     (இ - ள்.) நல்ல பாங்கெலாம் - அழகிய பக்கங்கள் எங்கும், இட்டவில் இரட்டையும்
- வைக்கப்பட்ட இரட்டை விற்களும், இரண்டு கெண்டை போல்பவும் - இணைக்கயல்களை
ஒப்பனவும், விட்டிலங்கு - ஒளிவிட்டுத் திகழாநின்ற, தொண்டை யங்கனிப் பிழம்பொடு -
கொவ்வைக் கனியின் உருவத்தோடே, உள்விராய் - உள்ளகத்தே பரவி, சுட்டி -
நுதற்சுட்டியாகிய,


(பாடம்) 1. போலவும்.