பக்கம் : 347
 

சூட்டு - அணியினை, அணிந்து - சூடி, சூளிமை மணி சுடர்ந்து - சிகையின் கண் நீலமணி
ஒளிவீசி, நீள் பட்டம் - நீண்ட பொற்பட்டத்தைக்கட்டிய, வட்டம் அல்லது - வட்ட
வடிவமான மகளிர் முகங்களை யல்லாது, இல்லை - வேறு பொருள்கள் காணப்படவில்லை.
யாண்டும் மாதர் முகங்களே காணப்பட்டன என்க.

வில்லிரட்டை - புருவங்கள். இரண்டுகெண்டை - கண்கள். வட்டம் - முகமண்டிலம்.

( 53 )

484. அலத்தகக்கு ழம்புத1ம்ம டித்தலத்தொர் பாகமா
2நிலத்தலத்தொர் பாகமாக நீடுவாயில் கூடுவார்
3கலைத்தலைத்தொ டுத்தகோவை கண்ணெகிழ்ந்து சிந்தலான்
மலைத்தலைத்த ழற் 4சிதர்ந்த போன்றமாட வாயெலாம்.
 

     (இ - ள்.) அலத்தகக் குழம்பு - தாம்பூசிக்கொண்டிருந்த செம்பஞ்சுக் குழம்பு,
அடித்தலத்து - தம் அடிகளின், ஒர்பாகமா - ஒருபாதி இருப்ப, ஓர் பாகம் - மற்றோர்
பாதி, நிலத்தலத்து ஆ - பூமியிடத்தனவாக, நீடுவாயில் - நீண்ட வாயிலிலே, கூடுவார் -
குழீஇய மகளிர்கள், கலைத்தலை - மேகலையிடத்தே, தொடுத்த கோவை - தொடுக்கப்பட்ட
மணிக்கோவை, கண்ணெகிழ்ந்து - இடநெகிழ்ந்தனவாய், சிந்தலான் - சிந்துதலாலே, மாடவா
யெலாம் - மாடங்களிடமெல்லாம், மலைத்தலை - மலையிடத்தே, தழல் சிதர்ந்த -
தீப்பொறிகள் சிதறினதை, போன்ற - ஒப்பாயின. (எ - று.)

அலத்தகம் ஊட்டிய மகளிர் அஃது உலருமுன் புறப்பட்டனராகலின் அக்குழம்பில் ஒருபாதி
நிலத்திலே ஒட்டிக்கொண்டது; ஒரு பாதி மட்டுமே அடிகளிற் காணப்பட்டது என்றவாறு.
இஃது அம் மகளிரின் விரைவினை உணர்த்திற்று.

( 54 )

485. பாடகந்து ளங்கவும்ப சும்பொனோலை மின்னவும்
சூடகந்து ளும்பவுஞ்சு ரும்புசூழ்ந்து பாடவும்
ஊடகங்க சிந்தொசிந்து நின்றுசென்று 5வந்துலாய்
நாடகங்க ணன்னகர்க்க ணங்கைமார்ந விற்றினார்.
 

(பாடம்) 1. மடித்தகத்தோர். 2. நிலத்தகத்தொர். 3. நலத்த. 4. சிதர்ந்து. 5. வந்துபோந்து.