பக்கம் : 349
 

நம்பிமாரைக் கண்ட நங்கைமார் மயல்கொண்டு தளர்தல் இதனிற் கூறப்பட்டது.
சிலபிரதிகளில், முதலடி ‘மாலையால் விளங்கியும் வாசச்சுண்ணம் வீசியும்‘ என்று
காணப்பெறுகிறது.

( 56 )

487. வேய்மறிந்த தோள்விளர்த்து வெவ்வுயிர்ப்பொ டுள்விராய்த்
தோமறிந்த 1சூழ்துகின்னெ கிழ்ந்துடுத்து வீழ்ந்தசைஇப்
பூமறிந்த தேங்குழன் 2முடிப்பொதிந்து வீழ்த்துலாய்த்
தாமறிந்த முல்லைவாய 3தாதுகுத்து டங்கினார்.
 

     (இ - ள்.) வேய் - மூங்கிலை, மறிந்த - தோற்று ஓடச்செய்த, தோள் - தம்
தோள்கள், விளர்த்து - பசலையான் வெளிறி, வெவ் உயிர்ப்பொடு - வெவ்விய
பெருமூச்சோடே, உள்விராய் - நெஞ்சு கலந்து, தோ - கொய்சகம், மறிந்த - மறிந்துகிடந்த,
சூழ் துகில் நெகிழ்ந்து - சுற்றப்பட்ட ஆடையைக் குலைத்து, உடுத்து - மீண்டும் உடுத்து,
வீழ்ந்து - கீழ்வீழ்ந்து, அசைஇ - அசைந்து, பூ - பூவினை, மறிந்த - மடங்கிய, தேங்குழல்
- இனிய கூந்தலிடத்தே முடி பொதிந்து - உச்சியிலே சூட்டி, வீழ்த்து - அவற்றைப்
பின்னர் வீழப்பண்ணி, உலாய் - உலாவி, மறிந்த - செருகிய, முல்லைவாய - முல்லை
மலரிடத்தனவாகிய, தாது - பூந்தாதுகளை, உகுத்து - உதிர்த்து, உடங்கினார் -
உழல்வாராயினர். (எ - று.) தாம் : அசை.

( 57 )

விசயதிவிட்டர்களுடைய படை பொழிலை அடைதல்

488. கொங்குவார்ம லர்த்தடத்த மர்ந்தகோதை 4மார்களோ
டங்கராகம் வீற்றிருந்த ணிந்தவார மாகுலாய்
மங்கைமார்கள் கண்ணும்வண்டு மாலையும னங்களும்
தங்குமார்மி னம்பிமார்க டானைசோலை சார்ந்ததே.
 

     (இ - ள்.) அங்கராகம் வீறு இருந்து அணிந்த - நறுமணப் பூச்சுக்கள் பெருமை
பொருந்தப் பூசப்பெற்று அணியப்பெற்ற, ஆரம் - மாலைகள், மாகுலாய் - திருமகள்
நோக்கம் அமையப்பெற்றனவாகப் பொருந்தி, மங்கைமார்கள் கண்ணும் வண்டும் மாலையும்
மனங்களும் - மங்கைமாரின் கண்களும் வண்டுகளின் வரிசையும் மனங்களும் என்ற
இவைகள், தங்கு மார்பின் - தங்கப்பெற்ற திருமார்பினையுடைய, நம்பிமார்கள் தானை -


(பாடம்) 1. சூழ்ந்துகில் நெகிழ்ந்தெடுத்த வீழத்தசைஇ. 2. முடித்தெடுத்து. 3. தாதுகுத் தடங்கினார். 4. மாதரோடு.