பக்கம் : 35
 

என்னுஞ் சிந்தாமணிச் செய்யுட்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், “இமவானில்
மரகதப்பாறையிற் பதுமையென்னுங் கயத்தில் தோற்றிய பொற்றாமரையிற் றிருவென்ன
விதையத் தரசன் கோயிலிலே பேதை வைகா நிற்குமென்க“ என்று உரை கூறினார்.
தட-பருமையை உணர்த்தும் உரிச்சொல்.

( 2 )

அகழியும் மதிலரணும்

38. செஞ்சுடர்க் கடவு டிண்டே ரிவுளிகா றிவள வூன்றும்
மஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயின் மாடத்
தஞ்சுட ரிஞ்சி, யாங்கோ ரகழணிந் தலர்ந்த தோற்றம்
வெஞ்சுடர் விரியு முந்நீர் வேதிகை மீதிட் டன்றே.
 
     (இ - ள்.) செம்சுடர் கடவுள் - சிவந்த ஒளியையுடைய கதிரோனது; திண்தேர்
இவுளி - வலிய தேரிற்பூட்டப் பெற்ற குதிரைகள்; கால் திவள ஊன்றும் - தமது கால்கள்
மெலியும்படி ஊன்றி ஏறுதற்கிடமாய்; மஞ்சுஉடை மதர்வை நெற்றி - முகிலை இடையிலே
உடைக்கின்ற அழகிய முடிகளையும்; வான் உழு வாயில் மாடத்து - விண்ணைக் கீறுகின்ற
கோபுரங் களையுமுடைய; அம் சுடர் இஞ்சி - அழகிய ஒளியை உடைய மதில்; ஆங்கு ஓர்
அகழ் அணிந்து அலர்ந்த தோற்றம்-அவ்விடத்தே ஒப்பற்ற அகழியாற் சூழப்பெற்று
விளங்குகின்ற காட்சி; முந்நீர் - கடலிடையே; வெஞ் சுடர் விரியும் வேதிகை-வெம்மையான
ஒளிகள் பரவப்பெற்ற ஒரு மேடை யை; மீது இட்டன்று - மேலாக அமைத்து வைத்ததைப்
போன்றது, (எ - று.)

     இது மதிலின் உயர்வு தோன்றுமாறு அமைந்து நிற்கின்றதாகலின் தொடர்புயர்வு
நவிற்சியணி. மதில் அகழியாற் சூழப்பெற்று வானளாவிய மாடங்களுடன் இலங்குங் காட்சி,
கடலினிடத்தே ஒரு திண்ணையமைத்து வைத்தாற்போல விளங்குகின்றது என்க. அகழிக்குக் கடலும், மதிலுக்கு அதனிடையே அமைத்த சுடர்வேதிகையும் உவமைகள். வேதிகை -
மேடை. வெஞ்சுடர் விரியும் வேதிகை எனக் கூட்டுக.

( 3 )

அம்மதிற் புறத்தே அமைந்த யானைகட்டுமிட மாண்பு

39. இரும்பிடு தொடரின் மாவி னெழுமுதற் பிணித்த யானைக்
கரும்பிடு கவள மூட்டும் கம்பலை கலந்த காவின்