பக்கம் : 351
 

விசய திவிட்டர்கள் வேழத்தில் நின்றும் இறங்குதல்

490. செம்முகப்ப சும்பொ1னோடை வெண்மருப்பி ணைக்கரு
2வெம்முகத்து வீழ்கடாத்து வேழநின்றி ழிந்தபின்
3கைம்முகத்து வேலிலங்கு காமர்தாங்கொ லென்றுசென்
றம்முகத்த தும்பிவண்டு தேனொடாடி யார்த்தவே.
 

     (இ - ள்.) செம்முகப் பசும்பொன் ஓடை - செம்புள்ளிகளையுடைய முகத்திலே
பசும்பொன்னாற் செய்யப்பட்ட பட்டத்தையும், வெண் மருப்பு இணை - வெள்ளிய இரண்டு
தந்தங்களையும், கருமுகத்து - கரிய முகத்திலே, வெம்வீழ் - வெம்மையாகப் பெருகுகின்ற,
கடாத்து - மதநீரையும் உடைய, வேழம் நின்று இழிந்த பின் - யானையினின்றும் விசய
திவிட்டர்கள் இறங்கிய பிற்பாடு, கைம்முகத்து - கையினிடத்திலே, வேல் இலங்கு -
வேற்படை விளங்கப்பெற்ற, காமர் தாம் கொல் என்று - காமர்கள் இவர்கள் தாமோ என்று
மயங்கி, சென்று - அவர்களைநெருங்கி, அம்முகத்த தும்பி - அழகிய முகத்தையுடைய
தும்பிகளும், வண்டு - வண்டுகளும், தேனொடு - தேன்களுடனே, ஆடி ஆர்த்த -
ஆடிக்கொண்டு ஒலி செய்தன. (எ - று.)

விசயதிவிட்டர்கள் யானையினின்று இறங்கியபோது வண்டுக் கூட்டங்கள் ஆரவாரித்தன என்க. வண்டுகள் இசையைக்கொண்ட முகத்தையுடைமையால் ‘அம்முகத்த தும்பிவண்டு‘ என்றார்.

( 60 )

பொழிலின் காட்சி

491. தாதுநின்ற தேறனீர் தளித்திவற்றின் 4மேலளி
கோதுகின்ற போதுகொண்டு சிந்திநம்பி மார்களை
மாதுநின்ற மாதவிக்5கொ டிகடந்6த ளிர்க்கையால்
போதுகென்றி டங்கள்காட்டு கின்றபோற்பொ லிந்தவே.
 

     (இ - ள்.) மாதுநின்ற மாதவிக்கொடிகள் - அழகு பொருந்திய குருக்கத்திக்
கொடிகள், தாதுநின்ற தேறல்நீர் - மகரந்தத் தாதுபடிந்த தேனாகிய நீரை, தளித்து -
துளித்து, இவற்றின் மேல் - அவ்வாறு


(பாடம்) 1. ஓடைசேர் மருப்பிணைக் கரும். 2. கைம்முகத்து வீழ்கடாத்து வேழ மேறிழிந்தபின். 3. கைம்முகத்தி லங்குவேல் காமர். 4. மேற்சுரும்பு. 5. கொடிக்கள்தம். 6. தடக்கையால்; குளிர்க்கையால்.