தெளித்த நீர்களின்மேல், அளிகோதுகின்ற போதுகொண்டு சிந்தி - வண்டுகள் குடைகின்ற மலர்களைக் கொண்டு தூவி, நம்பிமார்களை - விசய திவிட்டர்களை, போதுக என்று - இங்கு வருக என்று கூறி, தம் தளிர்க்கையால் - தம்முடைய தளிர்களாகிய கைகளினால், இடங்கள் காட்டுகின்ற போல் - அவர்கள் தங்குதற்குரிய இடங்களைக் காட்டுவனபோல் பொலிந்த - விளங்கின. (எ - று.) மாதவிக்கொடிகள் தேறலைத் துளித்தலும் போதுகளைச் சிந்துதலும் தளிரையசைத்தலும் இயற்கை. விசய திவிட்டர்கள் பொழிலுக்கு வந்தபோது மாதவிக் கொடிகளினிடத் துண்டாகிய இயற்கைத் தன்மை விசய திவிட்டர்களுக்கு வரவேற்பாக உரைக்கப்பட்டது. |
(இ - ள்.) போது உலாய வேரிமாரி - மலர்களினின்றும் பெருகுகின்ற தேன் மழையை, சாரலாய்ப் பொழிந்து - சாரல் மழையைப்போலப் பெய்து, தேன் கோதலால் - தேனை யுண்ணுவதால், பெரிந்த தாது - நெரிந்துதிர்ந்த மகரந்தப் பொடிகளை, கால் குடைந்துகொண்டு உறீஇ - கால்களினாற் குடைந்து கொண்டு பொருந்தி, மாது உலாய வண்டு இரைத்து - அழகு பொருந்திய வண்டுகளால் ஒலி செய்து, மங்குல்கொண்டு கண் மறைத்து - முகிலின் தன்மையை மேற்கொண்டு பார்ப்பவர்களின் கண்களை மறையச் செய்து விளங்குந்தன்மையால், சோலைவண்ணம் - அந்தப் பூங்காவின் பொதுத்தன்மை, ஏதிலார்க்கு இயங்கல் ஆவது அன்று - பிறர்க்குப் போக்கு வரவு செய்யக்கூடிய நிலைமையை உடையதன்று. (எ - று.) மழைபொழிதல் இரைத்தல் கருநிறம் பெற்றிருத்தல் என்பன முகிலுக்குரிய பண்புகளாம். வேரிமழை பொழிதல், வண்டுகளாற் பேரொலி செய்தல், அடர்ந்த மரங்களால் கருநிறம் பெறுதல் என்ற இத்தன்மையால் |