பக்கம் : 353
 

அந்தப்பொழிலும் முகிலின் தன்மையைக்கொண்டு புதிதாக எவரேனும் வந்தால் அவரால் இடமறிந்து உட்செல்ல முடியாத தன்மையமைந்து விளங்கிற்றென்க.

( 62 )

தென்றல் வீசுதல்

493. போதுலாய பூம்பொதும்பர் மேலதென்றல் வீசலால்
தாதுலாய போதணிந்து 1தாழ்ந்துதாம வார்குழல்
மாதரார்கள் 2போலவல்லி மார்புபுல்லி மைந்தரைக்
காதலால்வ ளைப்பபோன்று காவினுட்க லந்தவே.
 

     (இ - ள்.) போது உலாய பூம் பொதும்பர் மேல - மலர்கள் அசைகின்ற அழகிய
பொழிலின்மேல், தென்றல் - தென்றற் காற்று, வீசலால் - வீசுதலாலே, வல்லி -
பூங்கொடிகள், தாது உலாயபோது அணிந்து - தாதுக்கள் பொருந்திய மலர்களை
அணிந்தனவாய், தாழ்ந்து - வணங்கி, தாமவார்குழல் மாதரார்கள் போல் -
மலர்மாலையணிந்த நீண்ட கூந்தலையுடைய மகளிரைப் போன்று, மைந்தரை - விசய
திவிட்டரை, மார்பு புல்லி - மார்பிடத்தே பொருந்தி அணைத்து, காதலால் -
காதலுடைமையாலே, வளைப்பபோன்று - அவரை வளைத்துக் கொள்வனபோல, காவினுள்
- அப்பூம்பொழிலிடத்தே, கலந்த - அவரோடு கலந்தன (எ - று.)

தென்றல் இவ்வாறு வீசியது என்க.

( 63 )

விசயதிவிட்டர்கள் அசோகமரத்தின் இடத்தை அடைதல்

494. புல்லிவண்ட மர்ந்துதங்கு பூந்தழைப்பொ தும்பிடை
மல்லிகைக்கொ டிக்கலந்து மௌவல்சூட வௌவுநீர்
வல்லிமண்ட பங்கள்சென்று மாதவிக்3கொ ழுந்தணி
அல்லிமண்ட 4பத்தயல சோகமாங்க ணெய்தினார்.
 

     (இ - ள்.) வண்டு - வண்டுகள், புல்லி - தழுவிக்கொண்டு, அமர்ந்து - பொருந்தி,
தங்குபூந்தழைப் பொதும்பு இடை - தங்கப்பெற்ற பூவோடு கூடிய இலைகளைக்கொண்ட
அச்சோலையினிடத்தில், மல்லிகைக் கொடிக்கலந்து - மல்லிகைக் கொடிகள் சேரப்பெற்று,
மௌவல்சூட - முல்லைக் கொடியையும்


(பாடம்) 1. தாழ்ந்த தாமவார். 2. போலவல்லி. 3. கொழுந்தணிந்த. 4. பத்தையல.