பக்கம் : 358
 

     (இ - ள்.)செம்பொன்வான் அகட்டு இழிந்து - செம்மையான அழகிய விண்ணின்
நடுவில் இருந்து நிலவுலகத்தில் இறங்கி, தெய்வயானையுள் மறைஇ - தெய்வத்தன்மையுள்ள
யானையிடத்தே மறைந்து, வம்புநீர் வரைப்பு அகம் - புதுமையான நீரைக்கொண்ட கடலை
எல்லையாகவுடைய நிலவுலகத்தை, வணக்கவந்த மாண்புடை - வணங்கச் செய்யுமாறு
தோன்றிய பெருமையையுடைய, நம்பிமீர்கள்! - நம்பிமார்களே! அம்பொன் மாலைமார்பினீர்
- அழகிய பொன்னரிமாலையை அணிந்த மார்பையுடையவர்களே! நுங்கள் பாதம் நண்ணி
நின்று இறைஞ்சுவார் - உங்களுடைய அடிகளைப்பொருந்தி நின்று வணங்குகின்றவர்கள்,
அருந்தவம் செய்தார்கள்-செய்தற்கரிய அருமையான தவத்தைச் செய்தவர்களாவர், (எ-று.)

“எமக்குநீர் பணிந்த தென்னை?“ என்ற விசயன் கேட்டனனாதலின் அதற்கு மருசி இப்படிப்
பதிலுரைக்கலாயினன் என்க. நீங்கள் மனிதக் கோலத்தோடு யானையின்மீ திருப்பினும்,
விண்ணிலிருந்து இறங்கிவந்த தேவரே யாவீர். உமது தெய்வத்தன்மையை மறைத்துள்ளீர்
என்று கூறுகிறான். பேராழி மன்னர்கள் பிறக்கும்போது அரசன் தேவிக்குப் பதினான்கு
கனாக்கள் நிகழுமென்பதும் வாயின் வழியாக யானை வயிற்றுட் புகுந்ததாகக் காண்பது
அவற்றுள் ஒரு கனா என்பதும் சைநநூற் கொள்கை. ஆதலால் யானையுள் மறைஇ
என்றான்.

( 70 )

501. திங்கள்வெண் 1கதிர்ச்சுடர்த் திலதவட்ட 2மென்றிரண்
டிங்கண்மா லுயிர்க்கெலாமே ளிய்யவென்று தோன்றலும்
தங்கள்சோதி சாரலாவ வல்லவன்ன நீரவால்
எங்கண்முன்னை 3நுங்கடன்மை யென்றுபின்னை யேத்தினான்.
 

     (இ - ள்.) திங்கள் வெண்கதிர் - திங்களினுடைய வெள்ளியகிரணமும், சுடர்த்திலத
வட்டம் - கத்தூரித் திலகத்தின் வட்டமும், என்ற இரண்டு - என்று கூறப்பட்ட இரண்டும்,
இங்கண் - இவ்வுலகத்திலே, மால்உயிர்க்கு எலாம் - பெருமை பொருந்திய
உயிர்த்தொகைகளுக் கெல்லாம், எளிய்ய என்று தோன்றலும் - எளிமையானவையாகத்
தோன்றினாலும், தங்கள் சோதி - அவற்றின் ஒளிகள், சாரல் ஆவ அல்ல - உலகத்தாரைச்
சேர்வனவல்ல,


(பாடம்) 1. கதிர்ச்சுடர்த்ததிலத. 2. மென்றிரண்டும். 3. நுங்கடம்மை.